Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிடிஆர் வாய்க்கு சர்க்கரை தான் போடனும்.. கோவையில் இத்தனை ஐடி நிறுவனங்களா? அசரடிக்கும் அசுர வளர்ச்சி

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் தற்போது 700க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் இருக்கின்றன. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் ஐடி துறை வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீதம் என்கிற அளவில் வளர்ந்து வருகிறது.

ஒரு காலத்தில் கோவை நகரம் ஜவுளி தொழிலுக்கு மிகவும் பிரபலமாக இருந்தது. இப்போது அதில் முதன்மையான இடத்தில் இருக்கிறது. அதேநேரம், பம்ப்செட், கிரைண்டர், மிக்ஸி ,மோட்டார் போன்றவை அதிக அளவில் உற்பத்தி செய்யும் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உருவாகின. அடுத்தாக கனரக வாகனங்கள் மற்றும் கார்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிகரிக்க தொடங்கின.. அதன்பிறகு என்ஜினீயரிங் நிறுவனங்கள், சிஎன்சி மிஷின் உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்தன.

Coimbatore has 744 IT companies Amazing growth Expected to attract more in coming years

இப்படி பல்வேறு தொழிற்சாலைகள் அதிகரித்ததால் கடந்த 30 வருடங்களில் கோவை அசுர வளர்ச்சி அடைந்தது. அதேநேரம் தமிழ்நாட்டில் மற்ற எந்த நகரங்களிலும் இல்லாத ஒன்றாக கல்லூரிகளின் எண்ணிக்கையும் கோவையில் அதிகரிக்க தொடங்கியது. கோவையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் இருப்பதால், இங்கு வந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. கல்லூரி படிப்பிற்கு மாணவர்கள் அதிகம் விரும்பும் நகரமாக கோவை இருப்பதால், ஹாஸ்டல்கள் மற்றும் உணவு தொழில்களும் இங்கு பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இதனிடையே தொழில் துறைகளில் சிறந்து விளங்கும் கோவையில் கடந்த 10 வருடங்களாக ஐடி துறை வேகமாக வளர்ச்சி அடைய தொடங்கியது. பல்வேறு ஐடி நிறுவனங்கள் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் கால் பதிக்க தொடங்கின. இதனால் கோவையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. மும்பை, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் ஆபிஸ்க்கு வந்து சேரவே மிகப்பெரிய அளவில் பணியாளர்கள் மெனக்கெட வேண்டியள்ளது. ஏனெனில் கற்பனைக்கும் மிஞ்சியதாக டிராஃபிக் இருக்கிறது. இதனால் பல முன்னணி பன்னாட்டு ஐ.டி. நிறுவனங்கள் கோவையில் கிளைகளை அமைக்க தொடங்கின.

தமிழக அரசும் இதற்கான முன்னெடுப்புகளை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறது. சரவணம்பட்டி , அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலையில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அரசு ஏற்படுத்தியது. இதனால் ஒரு காலத்தில் கோவையில் காட்டுப்பகுதி போல் இருந்த சரவணம்பட்டி இன்று நகரின் ஐடி நிறுவனய்ஙகள் அதிகம் உள்ள இடமாக உருவெடுத்து வருகிறது. இதேபோல் அவினாசி சாலையில் நவ இந்தியா சிக்னல் பகுதியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உருவாகி உள்ளன..பொள்ளாச்சி சாலையிலும் ஐடி நிறுவனங்கள் கிளைகளை அமைக்க தொடங்கி உள்ளன.

Coimbatore has 744 IT companies Amazing growth Expected to attract more in coming years

ஏற்கனவே சொன்னதுபோல் கோவை மாநகரம் உயர்கல்வி படிக்க பலரும் விரும்பும் நகரமாக இருப்பதால், கோவையில் படிப்பு முடித்தவுடன் ஐடி நிறுவனங்களில் வேலைக்கு சேர அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐடி படித்தவரகள் அதிகம் கிடைப்பது, பெங்களூர் நகருக்கு நிகரான கால நிலை, நிறைய காலியிடங்கள், நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை இல்லாதது போன்ற காரணங்கள், தொழிற்சாலைகளை தாண்டி, ஐடி நிறுவனங்கள் அதிகரிக்கவும் காரணமாக மாறி உள்ளது.

ஐடி துறை அமைச்சர் பிடிவேல் பழனிவேல் தியாகராஜன் கூறியது பேல், பல ஐ.டி. நிறுவனங்கள் கோவையில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் கோவையில் ஐடித் துறையில் ஆண்டு தோறும் 20 சதவீத வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.. கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தின் நிலவரத்தின்படி ஐ.டி. நிறுவனங்களின் எண்ணிக்கை 744 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு ரூ.1,100 கோடி மதிப்பில் அறிவித்துள்ள ஐ.டி. திட்ட அறிவிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெறும் என தெரிகிறது.

அதேநேரம் கோவையில் ஐடி துறை வளர இங்கு உடனடியாக சர்வதேச விமான நிலையம் தேவையாகும். கொச்சிக்கு நிகராக கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டியத அவசியம் ஆகும். அதேபோல் புறநகர் பகுதிகளில் சரவணம்பட்டி அருகே ஐடி நிறுவனங்கள் உள்ள பகுதியில் ஒருவழிப்பாதை என்கிற அளவில் தான் இருக்கிறது. அங்கு சாலையை அகலப்படுத்த வேண்டும். அதேபோல் குறுகலாக உள்ள கோவை சத்தி சாலையை அகலப்படுத்த வேண்டியது அவசியம் என்றும், கோவையில் மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும், பெங்களூர் மற்றும் சென்னையை இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் சாலைகள் உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+