திருத்தணி முருகன் கோயிலில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், தட்டச்சர் வேலை.. மாதம் 58 ஆயிரம் சம்பளம்.. விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கம்யூட்டர் ஆபரேட்டர், தட்டச்சர், காவலர் உள்பட மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.58 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக இருப்பது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் அமைந்து இருக்கும் இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

computer-operator-typist-jobs-at-thiruthani-murugan-temple-salary-up-to-58-000-how-to-apply-det

முருகன் கோவிலில் வேலை

பிரசித்தி பெற்ற இந்த திருக்கோயிலில் காலியாக உள்ள 23 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? சம்பளம் எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்:

பணியிடங்கள் விவரம்:

கூர்க்கா - 01, இரவு காவலர் - 02, மிருதங்கம் - 01, புஜங்கம் - 01, வேதபாராயணம் - 01, குடைக்காரர் - 01, மாலைக்கட்டி - 01, தமிழ்ப் புலவர் - 01, சமயப் பிரசங்கி - 01, சித்த மருத்துவர் - 01, ஓட்டுநர் - 02, செவிலியர் - 01, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் - 02, நாதஸ்வரம் - 03, துப்புரவாளர் - 01, தட்டச்சர் - 02, வேலையாள் - 02, மேளம் - 01, காவலர் - 01.என மொத்தம் 26 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி:

பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும்.

* கூர்கா, இரவு காவலர், குடைக்காரர் பணியிடத்திற்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.
* மாலை கட்டி பணியிடத்திற்கு தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். அதோடு கோயில் பூஜைகளுக்கு மாலை கட்ட தெரிந்து இருக்க வேண்டும்.
* தமிழ்புலவர் பணிக்கு பிஏ, எம்.ஏ (தமிழ்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை கூர்கா பணிக்கு ரூ.15,900 முதல் ரூ.50,400-வரை வழங்கப்படும். டிரைவர் பணிக்கு ரூ.18,500 முதல் 58,600 வரை வழங்கப்படும். டைப்பிஸ்ட் பணிக்கு ரூ.15,300-48,700 வரை வழங்கப்படும்.

விண்ணபிப்பது எப்படி?

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ளவர்கள், அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://hrce.tn.gov.in/-ல் இருந்து விண்ணப்பப் படிவத்தை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 05.11.2025 அன்றுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன், திருத்தணி முருகன் கோயில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படித்து, தங்கள் தகுதியை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகை வட்டம் மற்றும் நகர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபத்திருக்கோயில்களில் கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள விவரப்படியான காலி பணியிடங்களுக்கு, பணியாளர்களை தற்காலிகமாக பணி நியமனம் செய்ய இந்து மதத்தை சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து நிபந்தனைகளுக்குட்பட்டு 05.11.2025 பிற்பகல் 5.45-மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.100 செலுத்த வேண்டும்

விண்ணப்ப படிவம், தகுதி விவரங்கள், நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தினை ரூ.100/- திருக்கோயில் தலைமை அலுவலகத்தில் செலுத்தி அலுவலக நாட்களில், அலுவலக நேரங்களில் 04.11.2025 பிற்பகல் 5.45 மணி வரை நேரில் வந்து கேட்டு தெரிந்து பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+