தமிழக அரசு பேருந்தில் கண்டக்டர்&டிரைவர் வேலை! 685 பணியிடம்.. தேதி முடிய போகுது! உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க நாளைதான் (18.09.2023) கடைசி நாளாகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
தமிழ்நாட்டில், சென்னை, மதுரை,கும்பகோணம், கோவை,நெல்லை, விழுப்புரம் உள்பட 8 போக்குவரத்து மண்டலங்கள் உள்ளன. இந்த போக்குவரத்து மண்டலங்களின் கீழ் சுமார் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடைசியாக 2013-ம் ஆண்டு ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

ஆனால் அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக புதிய பணியாளர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நியமிக்கப்படவில்லை. இதனால், போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
இந்த நிலையில், 6 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள ஓட்டுநர் - நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த ஆண்டு அரசாணை அண்மையில் வெளியானது. அதன்படியே தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு 18.08.2023 விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது.
கல்வி தகுதி என்ன?: டிரைவர் கம் கண்டக்டர் பணிக்கு கண்டிப்பாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். ஹெவி லைசன்ஸ் வைத்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மாதம் அனுபவம் இருத்தல் அவசியம். முதலுதவி சான்றிதழ், பேட்ஜ் மற்றும் தகுதியான கண்டக்டர் லைசன்ஸ் ஆகியவை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2023 அன்றைய தேதிப்படி 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். (BC/MBC/DNC/SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. IRT மூலமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச வயது 24 மற்றும் 18 மாத பணி அனுபவம் என்ற நிபந்தனை பொருந்தாது. எழுத்துத்தேர்வு, பிராக்டிக்கல் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
செப்.18-ம் தேதி பிற்பகல் 1மணி வரை www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசுவிரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் டிசிசி (ஓட்டுநர் - நடத்துநர்) பதவிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.590ம், பிற பிரிவினர் ரூ.1,180 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 160 செ.மீட்டர் உயரம் இருத்தல் அவசியம். 50 கிலோ எடைக்கு மேல் இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications