கைநிறைய சம்பளம்! அழைக்கும் மத்திய அரசின் கார்டைட் ஆலை.. நீலகிரியிலேயே பணி.. மிஸ் பண்ணாதீங்க
நீலகிரி: நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் மத்திய அரசின் கார்டைட் தொழிற்சாலையில் 126 காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ஆயுத தொழிற்சாலையின் கீழ் இந்தியாவில் கார்டைட் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் கார்டைட் தொழிற்சாலை உள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு துறைக்கு தேவையான வெடிமருந்துகள் மற்றும் கார்டைட் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் தான் நீலகிரி மாவட்டம் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் ஏஓசிபி எனும் அட்டென்டென்ட் ஆபரேட்டர் கெமிக்கல் பிளன்ட் பணிக்கு 126 பேர் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் ஏஓசிபி டிரேட் சார்பில் என்சிவிடி சார்பில் வழங்கிய என்ஏசி/என்டிசி சான்று பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், முன்னாள் படை வீரர்களுக்கு 10 வயது முதல் 15 வயது வரை தளர்வு வழங்கப்படும். வயது வரம்பு என்பது 01.10.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். மேலும் டிஏ-வும் வழங்கப்படும். இருப்பினும் இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஓராண்டு மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். தேவையென்றால் மட்டுமே பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://cordite.co.in/ சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நவம்பர் 17 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். பூர்த்தியிட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை ஸ்பீட் போஸ்ட் மூலம் The General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris District, Tamil Nadu PIn - 643 202 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதனுடன் உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். இப்படி அனுப்பும்போது அந்த ஸ்பீட் போஸ்ட் மூலம் Application For The Post Of ‛‛AOCP (Attendant Operator Chemical Plant) Personnel On Contract Basis என எழுதி அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications