சிஆர்பிஎப் எஸ்ஐ, ஏட்டு பணி.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் எழுத்து தேர்வு.. தமிழகத்தில் எதிர்ப்பு
டெல்லி: சிஆர்பிஎப் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலர்களுக்கான தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடக்கும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிஆர்பிஎப் காவலர் தேர்வை இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளில் எழுதலாம் என அறிவித்ததை போல், சிஆர்பிஎப் தலைமை காவலர் தேர்வை தமிழில் எழுத மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சிஆர்பிஎப் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலர்களுக்கான தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்கிற உத்தரவு பிராந்திய மொழிகளை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
தமிழர்கள் தங்கள் தாய்மொழியில் தேர்வெழுத முடியாது. ஆனால் இந்திக்காரர்கள் அவர்கள் தாய்மொழியில் எழுதலாம் என்பது சரியானது அல்ல என்று டுவிட்டரில் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் சிஆர்பிஎப்பில் காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலர் பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பாணை கடந்த 8ம் தேதி வெளியிடப்பட்டது. இன்று முதல் (மே 10 ம் தொடங்கி) விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை பணியிடங்கள்:
சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோ) பணியிடம்: 27 இடங்கள் ( ஊதியம் எவ்வளவு: 29200-92300 )
தலைமை காவலர்கள்: 227 பணியிடங்கள் (ஊதியம் எவ்வளவு-25500-81100)
சிஆர்பிஎப்பில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்க மே 31ம்தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கணிணி வழி தேர்வுக்கான அட்மிட் கார்டு (ஹால் டிக்கெட்) ஜூலை 15ம் தேதி முதல் டவுன்லோடு செய்யலாம் என்றும், ஜூலை 22 முதல் 28ம் தேதிக்குள் சிஆர்பிஎப் தலைமை காவலர் பணிக்கான கணினி வழித்தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணினி வழித்தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் நடத்தப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தியில் தேர்வு எழுத அனுமதிக்கும் போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்களை ஏன் அவரவர் தாய் மொழியில் எழுத அனுமதிக்கக்கூடாது என்று கேள்வி எழுந்துள்ளது.
சிஆர்பிஎப் காவலர் தேர்வை இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளில் எழுதலாம் என அறிவித்ததை போல், சிஆர்பிஎப் தலைமை காவலர் தேர்வை தமிழில் எழுத மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
முழு அறிவிப்பாணையை செய்தியில் இணைக்கப்பட்டு பிடிஎப் பைலில் பாருங்கள்.

-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications