டிகிரி, டிப்ளமோ போதும்.. மாதம் ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரை சம்பளம்.. அழைக்கும் சிபிஆர்ஐ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சிபிஆர்ஐ எனும் மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின கட்டுப்பாட்டில் சிஎஸ்ஐஆர் எனும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (Council of Scientific and Industrial Research or CSIR) செயல்பட்டு வருகிறது.

 CSIR CBRI recruitment 2024 for Technical Assistant post salary from Rs.35,400 to Rs.1.12 laks


இந்த கவுன்சிலின் கீழ் சிபிஆர்ஐ எனும் மத்திய கட்டுமான ஆராய்ச்சி நிறுவனம் (Central Building Research Institute or CBRI) இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் சிபிஆர்ஐ-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் - கல்வி தகுதி: சிபிஆர்ஐ-யில் தற்போதைய அறிவிப்பின்படி டெக்னீக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு 10 பிரிவுகளில் மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிப்ளமோ சிவில், ஆர்க்கிடெக்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐடி, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதுதவிர பிஎஸ்சி வேதியியல், இயற்பியல், ஜியாலஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.02.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 முதல் 15 வரையும் வயது தளர்வு என்பது வழங்கப்படும்.

மாத சம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.35,400 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் மாதம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள், சிஎஸ்ஐஆர் தவிண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.cbri.res.in/ என்ற இணையதளம் மூலம் பிப்ரவரி மாதம் 2 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் டிரேட் தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+