தனலட்சுமி வங்கியில் அதிகாரி பணியிடங்கள்! டிகிரி முடிச்சவங்களுக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காது
சென்னை: பிரபல தனியார் வங்கியான தனலட்சுமி வங்கியில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிகிரி கல்வி தகுதி கொண்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு வாரங்கள் கூட கால அவகாசம் இல்லை. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
கேரளாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல தனியார் வங்கியாக தனலட்சுமி வங்கி உள்ளது. கேரளாவின் திரிசூரை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. பல ஆயிரம் ஊழியர்களுடன் இயங்கி வரும் இந்த தனலட்சுமி வங்கியில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
ஜூனியர் ஆஃபிசர், உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
* ஜூனியர் ஆஃபிசர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் போதும்.
* உதவி மேலாளர் பணிக்கு மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். இரு பணியிடங்களுக்குமே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் ஆகும்.
வயது வரம்பு:
ஜூனியர் ஆபிசர் பணிக்கு 21-வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உதவி மேலாளர் பணிக்கு 21 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
ஆன்லைன் எக்ஸாம் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எக்சாமில் பெறும் மதிப்பெண்களை வைத்து நேர்முகத்தேர்வுக்கு தேர்வர்கள் அழைக்கப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு மற்றும் ஆன்லைன் தேர்வில் பெறும் மதிப்பெண்களை பொறுத்து தேர்வர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எக்சாமை பொறுத்தவரை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோவை ஆகிய இரு நகரங்களில் மட்டும் நடைபெறும். அது போக நாடு முழுவதும் என்று பார்த்தால் டெல்லி, / என்.சி.ஆர், மும்பை/ தானே / எம்.எம்.ஆர், அகமதாபாத், காந்திநகர், ஐதராபாத், விஜயவடா / குண்டூர், கோழிக்கோடு, திரிசூர், எர்ணாகுளம் திருவனந்தபுரம் ஆகிய நகரஙகளிலும் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்:
தேர்வர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ. 708/ செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தனலட்சுமி வங்கியின் அதிகாரப்பூர்வ வங்கி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்வது அவசியம். ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 23.06.2025 அன்று தொடங்கியது. விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்; 12.07.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.dhanbank.com/pdf/Advertisement-for-recruitment-of-Junior-Officers-and-Assistant-Managers-21-Jun-2025.pdf


Click it and Unblock the Notifications
