இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க.. 10 முதல் 18 ஆயிரம் மாத சம்பளம்! சமூக நல அலுவலகத்தில் வேலை!
திண்டுக்கல்: சகி - ஒருங்கிணைந்த சேவை மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் கூறியுள்ளார். ஒப்பந்த அடிப்படையிலான பணியிடத்துக்கு 10,000 முதல் 18,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் மற்றும் பழனி சகி - ஒருங்கிணைந்த சேவை மையங்களில் (Sakhi-One Stop Centre) வழக்குப் பணியாளர்-1, வழக்குப் பணியாளர்-2, பாதுகாவலர்-1. பாதுகாவலர்-2. பல்நோக்கு உதவியாளர்-1. பல்நோக்கு உதவியாளர்-2 ஆகிய பதவிகளுக்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வழக்குப் பணியாளர்-1 பணியிடத்திற்கு திண்டுக்கல் மற்றும் பழனி பகுதிகளில் தலா ஒரு பணியிடம் என 2 காலிப்பணியிடங்களும், வழக்குப் பணியாளர்-2 பணியிடத்திற்கு பழனி பகுதியில் 3 காலிப்பணியிடங்ளும் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.
பாதுகாவலர்-1 பணியிடத்திற்கு பழனி பகுதியில் ஒரு காலிப்பணியிடமும், பாதுகாவலர்-2 பணியிடத்திற்கு திண்டுக்கல் பகுதியில் ஒரு காலிப்பணியிடமும் என இரண்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ.12,000 வழங்கப்படும்.
பல்நோக்கு உதவியாளர்-1 பணியிடத்திற்கு பழனி பகுதியில் ஒரு காலிப்பணியிடமும், பல்நோக்கு உதவியாளர்-2 பணியிடத்திற்கு திண்டுக்கல் மற்றும் பழனி பகுதிகளில் தலா ஒரு பணியிடம் என 2 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.
இப்பதவிக்கான விண்ணப்பம், கல்வித்தகுதி மற்றும் கூடுதல் தகவல்களை திண்டுக்கல் மாவட்ட dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை "மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அறை எண்.88 (தரைதளம்), மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், திண்டுக்கல் மாவட்டம்-624004" என்ற முகவரிக்கு வரும் 20.03.2025 மாலை 05.45-க்குள் அனுப்பிட வேண்டும் எனவும், தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்" என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
IT JOBS: சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. இந்த வேலைவாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications