வாவ் இப்படி இருக்கேனு நினைப்போம்! ஆனால் ஒழுங்கா ஒரு செல்போன் சிக்னல் கூட ஒர்க் ஆகாது.. அதான் வாழ்க்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாழ்க்கையின் தத்துவத்தையே உணர்த்துகின்றன கார்ப்பரேட் ஆபிஸ்கள்.. வேலை கிடைத்துவிட்டது. நல்ல சம்பளம்.. எல்லாமே அருமையாக இருக்க போகிறது என்று கார்ப்பரேட் ஐடி நிறுவனங்களில் வேலை செய்ய செல்வோருக்கு, அங்கு செல்போன் சிக்னலக்ள் எதுவும் ஒழுங்காக வேலையும் செய்யாமல், டேட்டாவும் வேலை செய்யாத போதுதான் தெரியும். இதுதான் வாழ்க்கை என்று என்று..

இன்றைக்கு பலரும் குளுகுளு ஏசி பொறுத்தப்பட்ட கண்ணாடிக்கூண்டுகளில் வேலையும்... காங்ரீட் கூண்டுகளில் வாழ்க்கையும் வாழ்கிறார்கள். சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதரபாத், டெல்லி போன்ற பெருநரங்களில் வாழ்க்கை என்பது பல ஐடி ஊழியர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கும் கண்ணாடி கூண்டும், காங்ரீட் கூண்டும் தான் வாழ்க்கையாக இருக்கும். கூண்டை திறந்த கிளிகளாய் சனி, ஞாயிறுகளில் சுற்றும் மக்கள், திங்கள் கிழமை பழையபடி அந்த கூண்டில் அடைகிறார்கள்.

jobs it company it jobs

கார்ப்பரேட் நிறுவன வேலைகளை பொறுத்தவரை , டார்க்கெட், டார்க்கெட், டார்க்கெட் என்று மட்டுமே இருக்கும். இலக்கு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் போல் வாழ்க்கை இருக்கும். ஐடி நிறுவனங்களில் வாழ்க்கை முறை ஒரே மாதிரி தான் இருக்கும்.அதேநேரம் அவர்களே அறியாத இன்னொரு சிக்கலும் அங்கு இருக்கிறது.

அற்புதமான உயரமான கார்ப்பரேட் அடுக்குமாடி ஆபிஸ்களாக கார்ப்பரேட் நிறுவனங்களும், ஐடி நிறுவனங்களும் இருக்கும். ஆனால் பல நிறுவனங்களில் செல்போன் சிக்னல் ஒழுங்காக வேலை செய்யாது. அப்படியே செல்போன் சிக்னல் சில நேரங்களில் வேலை செய்தாலும், மொபைல் டேட்டா கண்டிப்பாக வேலை செய்யாது. என்னடா இது என்று செல்போன் நிறுவனங்களுடன் கஸ்டமர் கேரில் சண்டை போட்டாலும் எதுவுமே மாறாது.. அதற்கு காரணம் உயரமான கார்ப்பரேட் அடுக்குமாடி ஆபிஸ்கள் அப்படித்தான் வடிவமைத்திருப்பார்கள்.

jobs it company it jobs

ஏனெனில் வேலை நேரத்தில் செல்போனில் யாரும் நீண்ட நேரம் பேசக்கூடாது என்பதும், மொபைலை நோண்டியபடி இருக்கக்கூடாது என்பதற்காகவும் பல ஐடி நிறுவனங்கள் அப்படித்தான் அமைக்கப்பட்டுள்ளன. சில கார்ப்பரேட் நிறுவனங்களில் தரைதளம் எதிலும் இண்டர்நெட் எடுக்காது. ஜன்னல்களே இல்லாத காற்றுக்கூட நுழைய முடியாத வகையில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு இருக்கும். குளுகுளு வசதி மட்டும் தான் இருக்கும்.

நீங்கள் மிகப்பெரிய ஜவுளி கடைகளுக்குள் சென்றால் இன்ட்ர்நெட்டே எடுக்காது. செல்போன் சிக்னல் மட்டுமே குறைந்த அளவு வேலை செய்யும். இன்றைக்கு அப்படித்தான் பல ஐடி நிறுவனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.. இதன் காரணமாக நினைத்த உடன் யாருடனும் செல்போனில் வேலை நேரத்தில் பேசிவிட முடியாது. இணையதளத்தை மொபைலில் பயன்படுத்தி, பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் என எதையும் பார்க்க முடியாது. ஆபிஸ் கம்ப்யூட்டர்களில் இவை எதுவும் வேலை செய்யாது.

சில ஐடி நிறுவனங்கள் மிகவும் சிக்கலான கட்டமைப்பில் இருக்கும். அங்கு செல்போன் சிக்னல் கூட சுத்தமாக வேலை செய்யாது.அவர்கள் ஆபிஸை விட்டு வெளியே வந்தால் மட்டுமே பேசக்கூட முடியும். இதை பற்றி நெட்டிசன் அம்மு என்பவர் புகைப்படத்தை வெளியிட்டு அதன் பக்கத்தில் தன் கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில், வாவ் இப்படி இருக்கேனு நினைப்போம் ஆனா ஒழுங்க ஒரு செல்போன் சிக்னல் / டேட்டா ஏதுவுமே வேலை செய்யாது.. அதான் வாழ்க்கை, இது நானா சிந்திச்சேன்" என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த இன்னொரு நெட்டிசன் , இது தொழில் நுட்ப ரீதியா , போன் அதிக நேரம் உபயோகிக்க /எடுக்காமலிருக்க செய்யும் வழி என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+