தூத்துக்குடி அருகே ரூ.60,000 சம்பளத்தில் வேலை.. இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைய உள்ள மருத்துவ மையத்திற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு தேர்வாகும் டாக்டர்களுக்கு 60000 ரூபாய் சம்பளம் கிடைக்கும். இதேபோல் செவிலியர்களுக்கு 14000 சம்பளம் கிடைக்கும். எழுத படிக்க தெரிந்த உதவியாளர்களுக்கு ரூ.6,000 சம்பளமாக கிடைக்கும்.

குலசேகரப் பாண்டியனுக்கு முத்தாரம்மன் காட்சியளித் ததால் குலசேகரன்பட்டினம் என்று அழைக்கப்படும் ஊரில் தான், முத்தாரம்மன் கோயில் அமைந்துள்ளது.திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 13 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள குலசேகரன்பட்டினத்தை சுருக்கமாக குலசை என்று திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதி மக்கள் அழைப்பார்கள்.

jobs tuticorin temple

இந்தியாவிலேயே கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தான் தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆண்டு தோறும் 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த கோயில் திருவிழா காலங்களை தவிர மற்ற நாட்களிலும் அதிகப்படியான மக்கள் வந்து செல்லும் மிக முக்கியமான ஆன்மீகதலமாகும். திருச்செந்தூர் முருகன்கோயிலுக்கு அடுத்தபடியாக இந்த கோயிலுக்குத்தான் அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்வார்கள். இங்கு அமைய உள்ள மருத்துவ மையத்திற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்

இதன்படி 2 மருத்துவ அலுவலர் பணியிடங்கள், 2 செவிலியர் பணியிடங்கள், 2 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்கள் என மொத்தம் ஆறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் MBBS முடித்தவராகவும், TNMSEஇல் பதிவு பெற்றவராகவும் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் மருத்துவ அலுவலர் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.60,000 சம்பளமாக வழங்கப்படும் என்றும் இந்து அறநிலையத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் DGNM (Diploma in General Nursing and Midwifery) முடித்தவராகவும், 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். செவிலியர் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.14,000 சம்பளமாக வழங்கப்படும் என்றும் இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.6,000 சம்பளமாக வழங்கப்படும் என இந்து அறநிலையத்துறை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைய உள்ள மருத்துவ மையத்தில் பணி புரிய விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும், நன்னடத்தை உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை விதித்த நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அரசிதழில் பதிவு பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடமிருந்து நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+