Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8ம் வகுப்பு பாஸா நீங்க? மாதசம்பளம் ரூ.62,200.. ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணி!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 8 ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என்ற நிலையில் மாத சம்பளமாக அதிகபட்சமாக ரூ.62,200 வரை வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பல பணியிடங்கள் அரசு அனுமதியுடன் மாவட்ட நிர்வாகங்கள் நிரப்பி வருகின்றன.

அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள காலிப்பியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் என 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி ஓட்டுநர் பணிக்கு 3 பேர், அலுவலக உதவியாளர் பணிக்கு 10 பேர் என மொத்தம் 13 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 8 ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 8 ம் வகுப்பு முடித்திருப்பதோடு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் விண்ணப்பம் செய்ய 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 42 வயதுக்குள் இருக்க வேண்டும். அலுவலர் உதவியாளர் பணிக்கு 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34 வயதுக்குள்ளும், கணவரை இழந்த பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இவர்களின் வயது என்பது 01.07.2022 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

 மாத சம்பளம் என்ன?

மாத சம்பளம் என்ன?

ஓட்டுநர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,500ம், அதிகபட்சமாக ரூ.62 ஆயிரம் வரையும் வழங்கப்படும். அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.15,700 முதல் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் மாதம் 10ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் தபாலில் இல்லாவிட்டால் நேரில் வழங்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), 2ம் தளம்-கோரம்பள்ளம், தூத்துக்குடி, 628 101. தொலைபேசி எண் 0461 - 2340579 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்களுக்கு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்க்காணலுக்கான தேதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+