நோ எக்ஸாம்.. அரசு நிறுவனத்தில் வேலை.. என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. ரெடியா?
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான "எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்" நிறுவனத்தில் 'Technical Officer' பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் "எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்" இந்திய அணுசக்தி துறையின் கீழ் இந்த நிறுவனம் செயல்படுகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு திட்டங்களில் அரசு துறைகளுடன் பல்வேறு பணிகளையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ELECTRONICS CORPORATION OF INDIA LIMITED - பொதுத்துறை நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான், இந்த நிறுவனத்தில் டெக்னிக்கல் ஆபிசர் பதவியில் காலியாக உள்ள 100 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தேர்வு இன்றி நேர்முகத்தேர்வு முறையிலேயே பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம் உள்ளிட்ட தகவல்களை கீழே பார்க்கலாம்
கல்வி தகுதி: டெக்னிக்கல் ஆபிசர் பணியிடத்திற்கு பிஇ/ பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல் வகுப்பில் (குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CSE/IT/ECE/EEE/Mech./Electrical/Electronics/Instrumentation உள்ளிட்ட பிரிவுகளில் படித்த என்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மின்னணு உற்பத்தி துறை, பராமரிப்பு போன்ற பணிகளில் ஒரு வருட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, எஸ்.சி /எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வுகள் உண்டு.
தேர்வு முறை: டெக்னிக்கல் ஆபிசர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு கிடையாது. நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடைபெறும். காலை 9 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும். அலுவலகத்தின் முகவரி: Corporate Learning & Development Centre, Nalanda Complex, TIFR Road, Electronics Corporation of India Limited, ECIL Post, Hyderabad. நேர்முகத்தேர்வுக்கு கல்வி தகுதி குறித்த சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?: முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். செயல்பாட்டை பொறுத்தவரை ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். முதல் ஆண்டில் ரூ.25 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்படும். 2 வது ஆண்டில் 28 ஆயிரமும் மூன்றாவது ஆண்டில் 31 ஆயிரமும் சம்பளமாக கிடைக்கும்.
தேர்வு முறை: தகுதியும் ஆர்வமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் www.ecil.co.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து கொண்டு அதை பூர்த்தி செய்து நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு நாட்டின் எந்த பகுதியில் வேண்டும் என்றாலும் பணியமர்த்தப்படலாம். தேர்வு குறித்த அறிவிப்பை தெரிந்து கொள்ள https://www.ecil.co.in/jobs/Advt_12_2023.pdf இங்கே கிளிக் செய்யலாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications