ஏகலைவா பள்ளியில் வேலை! பிளஸ் 2 முடிச்சவங்களுக்கும் ஜாப் இருக்கு.. 4 ஆயிரம் பணியிடம்! இன்றே கடைசிநாள்
சென்னை: மத்திய அரசின் ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியில் காலியாக 4062 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஆசிரியர் முதல் ஜூனியர் உதவியாளர் வரையிலான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். எனவே இதுவரை விண்ணாப்பிக்காமல் இருந்தாலும் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்.
மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளி (EMRS) செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்.
காலிப்பணியிடங்கள்: ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளியில் மொத்தம் 4,062 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. பள்ளி முதல்வர் பணிக்கு 303 பேர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் (Post Graduate Teachers or PGTs) பணிக்கு 2,266 பேர், அக்கவுண்டன்ட்(Accountant) பணிக்கு 361 பேர், ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கு 759 பேர், லேப் அட்டென்டன்ட் பணிக்கு 373 பேர் என மொத்தம் 4,062 பேர் செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: முதல்வர் பதவிக்கு விண்ணப்பம் செய்வோர் முதுகலை பட்டப்படிப்புடன் பிஎட் முடித்திருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் விண்ணப்பிப்போர் ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, ஜியாகிராமபி, காமர்ஸ், பைனான்சியல் அக்கவுண்டிங், காஸ்ட் அக்கவுண்டிங், எக்கனாமிக், மொழிப்பாடங்கள் உள்பட பிற பாடங்களில் முதுகலை படிப்புடன் பி.எட் படித்து இருக்க வேண்டும்.
அக்கவுண்டட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், பிகாம் பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கு 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டைப்பிங் திறனும் பெற்றிருக்க வேண்டும். லேப் அட்டென்டென்ட் பணிக்கு 10ம் வகுப்புடன் டிப்ளமோ லேபோரேட்டரி டெக்னீக் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு: முதல்வர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அக்கவுண்டிங், ஜூனியர் செயலக உதவியாளர், லேப் அட்டென்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
மாத சம்பளம்: பள்ளி முதல்வர் பணிக்கு சம்பளமாக ரூ.78,800 முதல் ரூ.2.09 லட்சம் வரையும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.47,600 முதல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100 வரையும் சம்பளம் வழங்கப்படும். அக்கவுண்டென்ட் பணிக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரையும், ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையும், லேப் அட்டென்டென்ட் பணிக்கு ரூ.18,000 முதல் ரூ56,900 வரையும் சம்பளம் வழங்கப்படும் .
விண்ணப்பிப்பது எப்படி? ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணமாக
முதல்வர் (Principal ) பணிக்கு ரூ.2000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்(Post Graduate Teachers) பணிக்கு ரூ.1,500, பிற பணிகளுக்கு ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் emrs.tribal.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
ஜூலை 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் தொடங்கியது. விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 31ம் தேதி) கடைசி நாளாகும். எனவே, இதுவரை விண்ணப்பிக்காமல் இருந்தாலும் இன்றைக்குள் விண்ணப்பித்து விடுங்கள். விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு குறித்த முழு விவரங்களை emrs.tribal.gov.in இணையதளத்தில் உள்ள அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications