சைக்கிள் ஓட்டத் தெரிந்தால் ரூ.50,000 வரை சம்பளத்தில் அரசு வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?
தருமபுரி: சைக்கிள் ஓட்டத் தெரிந்தால் ரூ.50,000 வரை சம்பளத்தில் அரசு வேலை வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்கள் வாரியாக அமைந்துள்ள ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office assistants) காலிப் பணியிடங்களுக்கான ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் நவம்பர் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
வேலை தரும் நிறுவனம்: ஊரக வளர்ச்சி துறை
வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
காலி பணியிடங்கள்: 4
கல்வி தகுதி:: 8வகுப்பு தேர்ச்சசி
வயது வரம்பு: 32 வயது வரை
என்ன தகுதி: சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம் எவ்வளவு: ரூ. .15700-50000/- மற்றும் இதர படிகள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21/11/20023
விண்ணப்பிக்க வேண்டிய இடம்: ஊரக வளர்ச்சி துறை
தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள 4 உதவியாளர் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, விவரங்களை நிரப்பி ஊரக வளர்ச்சி துறையில் விண்ணப்பிக்க வேண்டும்..
என்ன வேலை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படை பணிகள் மேற்கொள்வதில் உதவி செய்ய வேண்டும்.. அலுவலக நடைமுறை பணிகளிலும் உதவி செய்ய வேண்டும்..
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பை பொறுத்தவரை 18-32 வயதுக்கு கீழ் இருக்கும் பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பில் பிசி/ஓபிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு. பட்டியல்/பழங்குடியின இனத்தவருக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு உள்ளது. அதாவது 37 வயது வரை எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பிக்கலாம்..
தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள 4 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு கண்டிப்பாக சைக்கிள் ஒட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியத்தை பொறுத்தவரை அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.15700-50000/- மற்றும் இதர படிகள் கிடைக்கும்.
தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள 4 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://dharmapuri.nic.in/ இணையதளத்தில் டவுன்லோடு செய்யலாம்.. அல்லதுதேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும் (National Career Service Portal) www.ncs.gov.in உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறைக்கு அனுப்ப வேண்டும்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications