இபிஎஃப்ஓ.. உங்ககிட்ட பிஎஃப் கணக்கு இருக்கா? நடக்க போகும் 5 மாற்றங்கள்.. நோட் பண்ணிக்கோங்க!
டெல்லி: EPFO 3.0 ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புதிய மாற்றம் அமலுக்கு உங்கள் EPFO கணக்கில் 5 முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
EPFO 3.0 ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் ஏற்படும் என்று இங்கே பார்க்கலாம்.
1. EPFO 3.0 வந்த பின் ஏடிஎம் வழியாக EPFO நிதி திரும்பப் பெறுதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல எளிமையான சேவைகளைக் இந்த முறை மூலம் கொண்டு வருவோம் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இனி EPFOவில் உள்ள பி.எஃப் பணத்தை எளிதாக ஏடிஎம் மூலம் எடுக்க முடியும். தற்போது உள்ள கடினமான முறையை பயன்படுத்த வேண்டியது இல்லை. இதற்கு பதிலாக எளிதாக ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியும்.
2. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு தற்போது 12 சதவீத வரம்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த வரம்பு தற்போது நீக்கப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனிப்பட்ட வகையில் சொந்தமாக சேமிப்பு பழக்கங்கள் இருக்கும். அந்த பழக்கங்களை அடிப்படையாக வைத்து வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு உயர்திக்கொள்ளலாம். 12%தான் தர வேண்டும் என்று இல்லை. தற்போது 1800 ரூபாய் கொடுப்பவர்கள் தேவைப்பட்டால் கூடுதலாக கொடுக்கலாம்.
3. EPFO சார்பாக கடந்த சில நாட்களில் 21.6 மில்லியன் க்ளைம்களை 3 நாள் காலக்கெடுவுக்குள் வழங்கி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆட்டோ மோட் முறையில் இத்தனை கிளைம்களை நிறைவேற்றி உள்ளதாக அரசு தெரிவித்து உள்ளது.
இப்போது, 60 சதவீத அட்வான்ஸ் (திரும்பப் பெறுதல்) EPFO உரிமைகோரல்கள் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படுகின்றன என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார். இதனால் வேகமாக பணம் மக்களுக்கு வழங்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார். அதாவது அதிகாரிகள் சோதனை செய்யாமல் தானாக கணினியே ஆவணங்களை சோதனை செய்து 3 நாட்களில் பணத்தை வழங்கிவிடும். ஜூன் மாதம் இதன் அளவு அதிகரிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
4. இனி எளிதாக பணம் எடுக்கும் வகையில் மாற்றங்களை செய்ய உள்ளனர். EPFO அட்வான்ஸ் கேட்டு 1-2 மாதம் காத்திருக்க வேண்டியது இல்லை. முன்பு இதற்கான கட்டுப்பாடுகள் இருந்தது. இப்போது 1 லட்சம் ரூபாய் வரை எளிதாக பணம் எடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு உள்ளது. நோய்/மருத்துவமனை தொடர்பான உரிமைகோரல்கள் மட்டுமன்றி, வீடு, கல்வி மற்றும் திருமணம் ஆகியவற்றிற்கான அட்வான்ஸ் தொகையும் ஆட்டோ மோடு முறையில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் EPFO சார்பாக கடந்த சில நாட்களில் 21.6 மில்லியன் க்ளைம்களை 3 நாள் காலக்கெடுவுக்குள் வழங்கி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
5. EPFO ஆட்டோமெட்டிக் முறையில் தரப்படும் செட்டில்மென்டுகள், அதாவது கூடுதல் பரிசோதனை இல்லாமல், அடிப்படை பரிசோதனைகளை மட்டும் வைத்து வழங்கப்படும் செட்டில்மென்டுகளுக்கான தொகை ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
அதாவது நீங்கள் உங்களின் பிஎப் பணத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயை எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த பணத்தை தர கூடுதல் சோதனைகள் இருக்காது. எப்போதும் செய்யப்படும் பான் கார்டு சோதனை, வங்கி கணக்கு சோதனை ஆட்டோமெட்டிக் முறையில் செய்யப்படும். அதன்படி தானாக 3 நாட்களில் உங்கள் கணக்கிற்கு பணம் வந்துவிடும். ஜூன் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications