ஈரோடு மாவட்ட பெண்களுக்கு சூப்பர் சான்ஸ்.. சத்துணவு மையத்தில் வேலை! 64 பணியிடங்கள்! நோ எக்ஸாம்
சென்னை: ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மொத்தம் 64 காலிப்பணியிடங்கள் உள்ளன. தேர்வு எதுவும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 9 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 64 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

சம்பளம் எவ்வளவு?
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணிநியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.3000/- தொகுப்பூதியத்தில் ஓராண்டு கால பணிக்குப் பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay - ரூ.3000 - 9000) ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு என்ன?
விண்ணப்பதாரரின் தகுதிகள் அனைத்தும் அறிவிப்பு வெளியிடப்படும் 19.12.2025-ஐ அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் வயது வரம்பு பழங்குடியினர் தவிர இதர அனைத்து பிரிவினருக்கும் 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். மொத்த காலிப்பணியிடங்களில் 25 விழுக்காடு பணியிடங்கள் விதவைகள் / கணவனால் கைவிடப்பட்டோரைக் கொண்டு நிரப்பப்படும்.
பிற தகுதிகள் என்ன
குறைவான பார்வைத் திறன் (மூக்குக் கண்ணாடி மூலம் சரிசெய்யப்பட்டது), உடல் இயக்கக் குறைபாடு (ஒரு கால்), குணப்படுத்தப்பட்ட தொழுநோய் (40% கைகளில் முழு செயல்பாட்டுத் திறன், உணர் திறன் மற்றும் செயல் திறன் உள்ளடக்கியது) மற்றும் திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட கற்றல் திறன் குறைபாடு (மிதமான) ஆகிய குறிப்பிட்ட உடல் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
இவ்வகையிலான மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்த காலிப்பணியிடங்களில் 4 விழுக்காடு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நியமனம் கோரும் மையத்திற்கும், விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ-க்குள் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது
நகராட்சி ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சமையல் உதவியாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ள பள்ளி மையங்களின் விபரம், எண்ணிக்கை, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இனச்சுழற்சி விபரம் மற்றும் விண்ணப்ப படிவ மாதிரிகள் ஆகிய விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை erode.nic.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சம்மந்தப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 23.12.2025 முதல் 09.01.2026-ம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை சனிக்கிழமை உட்பட (அரசு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) தொடர்புடைய மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மட்டும் விண்ணப்பம் சமர்ப்பிக்க தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
என்னென்ன ஆவணங்கள் வேண்டும்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் ஏதும் வழங்கப்பட மாட்டாது என்றும் விண்ணப்பங்கள் ஏதும் பெறப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், SSLC மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று போன்றவற்றின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தூரச்சான்று இணைக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பங்கள் உரிய பரிசீலனைக்கு பிறகு தகுதிவாய்ந்த மனுதாரர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும். அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள தேதியில் குறிப்பிட்ட இடத்தில் நேர்முகத் தேர்விற்கு விண்ணப்பதாரர் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 09.01.2026 மாலை 5.45 மணி.
காலிப்பணியிடங்கள் விபரம்:
ஈரோடு வட்டாரம் - 8,
மொடக்குறிச்சி வட்டாரம்- 3,
கொடுமுடி வட்டாரம் 1,
பெருந்துறை வட்டாரம் - 4,
சென்னிமலை வட்டாரம் - 2,
அம்மாபேட்டை வட்டாரம் - 6,
அந்தியூர் வட்டாரம் 11,
கோபிசெட்டிபாளையம் வட்டாரம் - 5,
நம்பியூர் வட்டாரம் 6,
தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரம் - 1,
சத்தியமங்கலம் வட்டாரம் 8,
பவானிசாகர் வட்டாரம் 2,
தாளவாடி வட்டாரம் - 1,
ஈரோடு மாநகராட்சி - 4,
கோபிசெட்டிபாளையம் நகராட்சி 1,
சத்தியமங்கலம் நகராட்சி - 1
ஆகிய காலிப்பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய / மாநகராட்சி / நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க;
https://erode.nic.in/notice_category/recruitment/
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications