8ம் வகுப்பு டூ டிகிரி முடித்தவரா? தேர்வு இல்லை.. கைநிறைய சம்பளம்! சுகாதாரத்துறையில் சூப்பர் வேலை
ஈரோடு: ஈரோடு மாவட்ட சுகாதார நலச்சங்கம் சார்பில் சித்தா கன்சல்டன்ட் உள்பட 7 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. 8 ம் வகுப்பு முடித்து தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் டிகிரி முடித்தவர்கள் வரை அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது ஈரோடு மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
சித்தா கன்சல்டன்ட்: இந்த பணிக்கு மொத்தம் 2 பேர் தேர்வு செய்யபப்ட உள்ளது. இதற்கு பிஎஸ்எம்எஸ் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாத சம்பளமாக ரூ.40 ஆயிரம் வரை வழங்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பி.புளியம்பட்டி அருகே சிருவாளூரில் உள்ள அரசு ஆரம்பர சுகாதார நிலையத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
டேட்டா ப்ராசசிங் அசிஸ்டென்ட்: இந்த பணிக்கு ருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ், பிசிஏ அல்லது ஏதேனும் ஒரு படிப்பில் டிகிரி முடித்து பிசிடிசிஏ, கம்யூட்டர் அப்ளிகேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட ஏதேனும் கம்ப்யூட்டர் படிப்பை முடித்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். இவர்கள் ஈரோட்டில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
Therapeutic Assistant: இந்த பணிக்கு சித்தா பிரிவில் ஒரு ஆண், ஒரு பெண் என மொத்தம் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிப்ளமோ நர்சிங் தெரபி படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இவர்கள் பி.புளியம்பட்டி அருகே சிருவாளூரில் உள்ள அரசு ஆரம்பர சுகாதார நிலையத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
பிசியோதெரபிஸ்ட்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட .ள்ளார். இவர் திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியமர்த்தப்படுவார். மாத சம்பளமாக ரூ.13 ஆயிரம் வழங்கப்படும். இளங்கலை பிரிவில் பிசியோதெரபிஸ்ட் படிப்பை முடித்தவர்கள் விண்பண்பம் செய்யலாம்.
செக்யூரிட்டி கார்ட்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். மாத சம்பளமாக ரூ.8,500 வழங்கப்படம். 8 ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரரருக்கு கட்டாயம் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தேர்வாகும் நபர் ஈரோடு அரசு மருத்துவமனையில் பணியமர்த்தப்படுவார்.
எம்பிஎச்டயிள்யூ - சித்தா: இந்த பணிக்கு 8 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8ம் வகுப்பு முடித்து தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தினசரி சம்பளமாக ரூ.300 வழங்கப்படும். தேர்வாகும் நபர்கள் ஆலமாபாளையம், அதானி, கேஎன் பாளையம், வெள்ளோடை, தாமரைபாளையம், எலுமத்தூர், சென்னிமலை, திங்களூரில் பணியமர்த்தப்படுவர்கள்.
எம்எம்யூ கிளீனர்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். தமிழில் எழுத படிக்க தெரிந்து இருப்பதோடு விண்ணப்பத்தாரர் 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இவர் சிவகிரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியமர்த்தப்படுவார். மாதசம்பளமாக ரூ.8,500 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி மாதம் 18 ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதார பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health society), திண்டல், ஈரோடு மாவட்டம் ஈரோடு 638 012 என்ற முகவரியில் வாங்கி பூர்த்தியிட்டு நேரில் வழங்கலாம். அல்லது விண்ணப்பங்களை வீட்டுக்கு வாங்கி சென்று பூர்த்தியிட்டு ஸ்பீட் போஸ்ட் மூலம் இந்த முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பங்களுடன் 10, 12, கல்லூரி சான்று, Additioal Qualification சான்று, அனுபவ சான்று, சாதி சான்று, முகவரியுடன் கூடிய விண்ணப்பத்தாரரின் ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகல்கள் உள்ளிட்டவற்றின் நகல்களை இணைத்து வழங்க வேண்டும். ஜனவரி 18 ம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் தான் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications