நோ எக்ஸாம்.. 8, 10ம் வகுப்பு படித்தவரா? மாத சம்பளம் ரூ.15,700 டூ ரூ.62,000..ஈரோட்டில் சூப்பர் வேலை
ஈரோடு: தமிழ்நாடு அரசின் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8 மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் நோ எக்ஸாம்.. 8, 10ம் வகுப்பு படித்தவரா? மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 சம்பளத்தில் பணியை பெற முடியும்.
தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலிப்பணியிடங்கள் குறித்த விபரம் வருமாறு:

காலியிடங்கள்: ஈரோடு மாவட்டத்தில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு 32 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஜீப் டிரைவர் பணிக்கு ஒருவர், இரவு காவலாளி பணிக்கு 6 பேர், ரெக்கார்ட் கிளர்க் பணிக்கு ஒருவர் என மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்பட .ள்ளனர்.
பணி வழங்கும் இடம்: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் டிஎன் பாளையம், தாளவாடி, சத்தியமங்கலம், பெருந்துரை, நம்பியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: ரெக்கார்ட் கிளர்க் பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு 8 ம் வகுப்புடன் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பதோடு அந்த தொழிலில் 5 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். இரவு காவலாளி பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே போதும்.
வயது வரம்பு: பொதுப்பிரிவினர் என்றால் 32 வயதுக்குள்ளும், பிசி, எம்பிசி என்றால் 34 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 37 வயதுக்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 42 வயது்குள்ளும், முன்னாள் படை வீரர்கள் என்றால் 48 வயதுக்குள்ளும் இருக்க வேண்டியது அவசியமாகும். வயது வரம்பு என்பது 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
மாத சம்பளம்: அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். ஜீப் டிரைவர் பணிக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையும், இரவு காவலாளி பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரையும், ரெக்கார்ட் கிளர்க் பணிக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையும் சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://erode.nic.in என்ற இணையதளம் சென்று எந்த இடத்தில் பணி வேண்டுமோ அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து டிசம்பர் 19ம் தேதிக்குள் அந்தந்த பஞ்சாயத்து யூனியன் அலுவலக முகவரிக்கு ரூ.30 ரூபாய் ஸ்டாம்ப் ஓட்டி தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி மற்றும் ஒவ்வொரு பதவிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனித்தனியே அறிய Click Here கிளிக் செய்யவும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அப்போது நேர்க்காணல் நடக்கும் தேதி, இடம் உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications