டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு.. வரப்போகும் பெரிய அறிவிப்பு.. தஞ்சை, தென்காசி மக்களுக்கு குட்நியூஸ்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் வரும் 13-ந்தேதி தொடங்க உள்ளதாக கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் தஞ்சை மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு இந்த அலுவலக தன்னார்வ பயிலும் வட்ட பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று குரூப்-4 தேர்வில் 14 மாணவர்களும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட போலீஸ் தேர்வில் 3 பேரும் வெற்றி பெற்று அரசு பணி வாய்ப்பு பெற்றுள்ளனர்.
குரூப்-1 தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இந்த தேர்விற்கு தயாராகி வரும் போட்டித் தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்க உள்ளது.
இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வார நாட்களில் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்புவோர்கள் 2 பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் குரூப் 1 தேர்வு இலவச பயிற்சி
இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் குரூப்-1 தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.இது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு" தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB மற்றும் TRB ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிப்பு 01.04.2025 அன்று வெளியிடப்படும் என்றும் இந்த TNPSC Group I முதல்நிலைத் தேர்வானது 15.06.2025 வரும் அன்று நடைபெறும் என்றும் TNPSC ஆண்டுத்திட்ட நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பயிற்சி வகுப்பு:TNPSC Group-1 முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் தென்காசி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 12.03.2025 புதன்கிழமை காலை 10.30. மணிக்கு துவங்க இருக்கிறது.
இப்பயிற்சி வகுப்புகள் அனுபவமுள்ள சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படும். மேலும் வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பம் உடையவர்கள் 04633-213179 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.TNPSC Group-1 முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications