ரூ.1.51 லட்சம் வரை ஊதியம்! 12, டிகிரி போதும்! இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தில் நல்ல வேலை
சென்னை: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் ரூ.1.51 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் என்பது மக்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான உணவை வழங்குவதை உறுதி செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.

இதன் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. இதுதவிர கவுகாத்தி, கொல்கத்தா, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
காலியிடங்கள்: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் 6 பிரிவுகளில் பல்வேறு ப பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர் பணிக்கு 8 பேர், சீனியர் ப்ரைவேட் செக்ரட்டரி பணிக்கு 3 பேர், பர்சனல் செக்ரட்டரி பணிக்கு 14 பேர், அசிஸ்டென்ட் மேனேஜர் (ஐடி) பணிக்கு ஒருவர், அசிஸ்டென்ட் பணிக்கு 6 பேர், ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு 10 பேர் என மொத்தம் 42 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர், சீனியர் ப்ரைவேட் செக்ரட்டரி, பர்சனல் செக்ரட்டரி, அசிஸ்டென்ட் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். அசிஸ்டென்ட் மேனேஜர் (ஐடி) பணியை விரும்புவோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி, பிஇ, பிடெக், எம்டெக் அல்லது எம்சிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜூனியர் அசிஸ்டென்ட் பணியை விரும்புவோர் 12 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 வழங்கப்படும். அதிகபட்சமாக மாதம் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100 வரை சம்பளம் வழங்கப்படும். பணி வாரியாக பார்த்தால் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர், சீனியர் ப்ரைவேட் செக்ரட்டரி பணிகளுக்கு ரூ.47,600 முதல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100 வரையும், பர்சனல் செக்ரட்டரி, அசிஸ்டென்ட் மேனேஜர் (ஐடி) பணிகளுக்கு ரூ.44,900 முதல் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 400 வரை வழங்கப்படும். அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையும், ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: இது டெபுடேசன் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் விண்ணப்பம் செய்வோர் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் பணியில் இருக்க வேண்டும். இவர்கள் தான் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்கள் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, தமிழ்நாட்டில் சென்னை, உத்தர பிரதேசத்தில் காசியாபாத் மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் fssai.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய நவம்பர் மாதம் 22ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்த பிறகு அதனை விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து Assistant Director (Recruitment), FSSAI Headquarters, 3rd Floor, FDA Bhawan, Kotla Road, New Delhi என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications