கறவை மாடுகள், வெள்ளாடு வளர்க்க விரும்புவோர் கவனத்துக்கு.. பயிற்சி முகாம் அறிவிப்பு
மதுரை: கறவை மாடுகள், வெள்ளாடு வளர்க்க விரும்புவோர் மதுரையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் பயிற்சி முகாம்களில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளாடு வளர்ப்பும், கறவை மாடுகள் வளர்ப்பும் நம் நாட்டின் மிக முக்கியமான லாபம் தரும் சுயதொழில்கள். விவசாய வேலை செய்து வரும் பலரும் இதைத்தான் செய்து வருகிறார்கள். சரியான பயிற்சியும், முறையான திட்டமிடலும் உள்ளவர்கள் வெள்ளாடு வளர்ப்பு மற்றும் கறவை மாடுகள் வளர்ப்பில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம். படித்து முடித்த பட்டதாரிகள், படிப்பை பாதியில் கைவிட்டோர் இந்த தொழிலில் இப்போது அதிக ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு சரியான பயற்சி அளிக்கிறது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி சாலையிலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் நவம்பர் 24ல் வெள்ளாடுகள் வளர்ப்பு பயிற்சி முகாமும் , நவம்பர் 26ல் கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி முகாமும் நடைபெறுகிறது
ஆர்வமுள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள், சுய தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் இப்பயிற்சிகளில் கலந்து கொண்டு பயனடையலாம். ஆர்வமுள்ளோர் 0452 - 248 3903ல் தொடர்பு கொண்டு விபரம் அறியலாம். பயிற்சிக்கு வருவோர் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என ஆய்வு மைய தலைவர் சிவசீலன் கூறியுள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications