உள்ளூரிலேயே அரசு வேலை.. ரெடியா இருங்க.. 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள்.. அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகம் முழுவதும் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளிக்கும் விதமாக இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் உள்ள வருவாய் கிராமங்களில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம உதவியாளர்களின் பணி என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. விஏஓவுக்கு உதவியாக இந்த கிராம உதவியாளர் நியமிக்கப்படுகிறார்கள். தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்களிலும் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் தான், 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளிக்கும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் விரைவில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கிராம உதவியாளர் பணியிடங்களை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் அந்த தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் கிராமத்திற்குள் வசிப்பவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, கிராம உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூரிலேயே வேலை கிடக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும் தேர்வு அறிவிப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியான பிறகே இது குறித்த முழு விவரங்கள் தெரிய வரும்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழக அரசின் வருவாய்துறை செயலாளர் அமுதா கிராம உதவியாளர் தேர்வு முறைகள் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டார். அதன்விவரம் வருமாறு:-
* கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது.
* அதன்படி, கல்வித் தகுதியில், பத்தாம் வகுப்பில் தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். மதிப்பெண் பட்டியலை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
* விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் பைக் ஓட்டுவதற்கான லைசன்ஸ் வைத்து இருந்தால் அதற்கு தேர்வு நடத்த வேண்டியது இல்லை.
* சைக்கிள் அல்லது பைக் ஓட்டுவதற்கான திறன் பெற்றிருந்தால் தேர்வு நடத்த வேண்டும். இதற்கு பத்து மதிப்பெண் வழங்க வேண்டும்.
* தமிழ் வாசிக்கும், எழுதும் திறன் பெற்றிருந்தால், திறனுக்கேற்ப 30 மதிப்பெண் வரை வழங்க வேண்டும்.
* நேர்காணல் குழுவின் முன் வாசித்து, எழுதிக்காட்ட வேண்டும். தொடர்புடைய கிராமத்தில் வசிப்பவராக இருந்தால் 35 மதிப்பெண் வழங்க வேண்டும். அல்லது தாலுகா எல்லைக்குள் வசிப்பவராக இருந்தால் 30 மதிப்பெண் வழங்கப்படும்.
* இண்டர்வியூ என்பது வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பிற தனி வட்டாட்சியர் ஆகியோரைக் கொண்ட குழுவினரால் நடத்தப்படும்.
* விண்ணப்பதாரரின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 6, அதிகபட்சம் 12 மதிப்பெண் வரை வழங்கலாம். எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் 6-ஐ விட குறைவாகவோ, 12-ஐவிட அதிகமாகவோ மதிப்பெண் வழங்கக்கூடாது.
* கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் உரிய விதிகளை பின்பற்றி வெளியிட வேண்டும். இதனை மாவட்ட கலெக்டர்கள் மேற்பார்வையிட வேண்டும்.
* தேர்வு முறையானது உரிய விதிகளை பின்பற்றி நடைபெற்றுள்ளதை அந்தந்த மாவட்ட கல்டெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.
* தேர்வுக்கான முடிவுகளை வெளியிட வேண்டும். இந்த விதிகளில் மீறினால் அனைத்து அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் விரைவில் இந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications