தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 53 விஏஓக்கள் நியமனம்.. எல்லாருக்குமே ஒரு ஒற்றுமை
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை என மூன்று வருவாய் கோட்டங்களும், 589 ஊராட்சிகளும், 906 வருவாய் கிராமங்களும் உள்ளன. இந்த கிராமங்களில் போதிய கிராம நிர்வாக அதிகாரிகள் இல்லாததால், சில அதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை கவனித்து வந்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 53 பேர் ஒரே நாளில் கிராம நிர்வாக அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை என மூன்று வருவாய் கோட்டங்களும், 589 ஊராட்சிகளும், 906 வருவாய் கிராமங்களும் இருக்கின்றன. இந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் போதிய கிராம நிர்வாக அதிகாரிகள் இல்லை. இதன் காரணமாக சில அதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை கவனித்து வந்துள்ளார்கள்.
கடந்த ஆண்டு (2024) ஜூன் மாதம் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்துக்கு 53 கிராம நிர்வாக அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்கள்.

அதன்படி நேற்று முன்தினம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, தங்கள் பணியாற்ற உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான ஆணையை பெற்றுக் கொண்டு, கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வாழ்த்துகளை பெற்றுச் சென்றார்கள்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ள பலர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.. தஞ்சை மாவட்டத்தில் தற்போது ஒரே நாளில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியில் சேர்ந்துள்ளார்கள். 10 பெண்கள் உள்பட 53 பேர் பணியில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2025 குரூப் 4 தேர்வு எப்போது
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி, அனைத்து தேர்வுகளும் குறிப்பிட்ட தேதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு நடத்தி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. அந்த வகையில், குரூப்-1 தேர்வு மற்றும் குரூப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் திட்டமிட்டபடி வெளியிடப்பட உள்ளது. தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும்போது காலிப்பணியிடங்களின் முழுவிவரமும் அதில் குறிப்பிடப்பட உள்ளது.
தேர்வு எழுதுவோரின் வசதிக்காக விடைத்தாள் நடைமுறையை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. விடைத்தாள் பக்கத்தை தேர்வர்கள் எந்தவிதமான சந்தேகமோ, குழப்பமோ இல்லாமல் மிக எளிதாக பூர்த்தி செய்ய இயலுமாம். தேர்வர்கள் எளிதாக விடையளிக்கும் வகையில் விடைத்தாள் நடைமுறை அமைந்திருக்கும் என்றும் தேர்வு முடிவுகளை விரைவாகவும் அதேநேரத்தில் சிறு தவறு கூட இல்லாமல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகரன் அண்மையில் பேட்டி ஒன்றில் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications