HCL வேலைவாய்ப்பு.. அனுபவம் எதுவும் வேண்டாம்.. BBA முடித்தவர்களுக்கு ‛ஜாக்பாட்’

Subscribe to Oneindia Tamil

மதுரை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் நிறுவனத்தில் கிராஜுவேட் டிரெய்னி பிரிவில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு முன்அனுபவம் தேவையில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

இந்தியாவில் முன்னிலையில் உள்ள ஐடி நிறுவனங்களில் ஒன்று எச்சிஎல் (HCL or HCL Technologies). இந்த நிறுவனம் தான் இந்தியாவில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி துறையில் 3வது இடத்தில் உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் இந்த நிறுவனத்தில் தலைமையிடம் அமைந்துள்ளது.

it jobs job jobs

இருப்பினும் நொய்டா உள்பட பல்வேறு முக்கிய நிறுவனங்களில் எச்சிஎல் இயங்கி வருகிறது. கர்நாடகாவில் பெங்களூர், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் கிராசூவேட் டிரெய்னி (Graduate Trainee) பிரிவில் சேல்ஸ் டெவலப்மென்ட் (Sales Development) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு BBA படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பொதுவாக ஐடி நிறுவனங்களில் பிபிஏ படித்தவர்களுக்கு என்று பிரத்யேக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது அரிதாகவே வெளியாகும்.

இந்த பணிக்கு 2023, 2024ம் ஆண்டுகளில் பிபிஏ படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் இந்த அறிவிப்பில் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பணிக்கு தேர்வாகும் நபர்கள் 12 மாத (அதாவது ஓராண்டு) அக்ரிமெண்ட்டில் பணியாற்ற வேண்டும். ஒருவேளை பணிக்கு தேர்வாகி முதல் 12 மாதத்துக்குள் வேலையை விட்டால் அவர்கள் எச்சிஎல் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் எச்சிஎல் நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்டு நல்ல சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் குறித்த அறிவிப்பு என்பது பைனல் இண்டர்வியூவின் போது தெரிவிக்கப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப பதிவு முடிவுக்கு வரலாம். எனவே முடிந்த வரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்யலாம்.

மேலும் இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் எங்கு பணியமர்த்தப்படுவார்கள் என்பது பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம். அதேவேளையில் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனால் அதிர்ஷ்டம் இருந்தால் தமிழகத்திலேயே பணி வாய்ப்பு கூட கிடைக்கலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+