3 பிரிவுகளில் காலியிடங்கள்.. மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ரெடியா?
மதுரை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல்-லில் 3 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி எச்சிஎல் நிறுவனத்தில் டெஸ்ட் மேனேஜர் (Test Manager), சீனியர்டெஸ்ட் மேனேஜர் (Senior Test Manager), சீனியர் சொல்யூஷன் ஆர்க்கிடெக்ட் (Senior Solution Architect) ஆகிய 3 பிரிவுகளில் பணியிடங்கள் காலியாக உள்ளனர்.
இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி அல்லது இன்ஜினியரிங் சார்ந்த படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். டெஸ்ட் ஆட்டோமேஷன் ரோலில் 5 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் லீட் ரோலில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் Playwright, TypeScript/JavaScript உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Selenium, Cucumber (BDD), ஏபிஐ டெஸ்ட்டிங் டூல்ஸ்களான RestAssured, Postman உள்ளிட்டற்றவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் CI/CD டூல்ஸ்களான ஜென்கின்ஸ், ஜிட்லப் சிஐ உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல், Agile மெத்தடாலஜிஸ் மற்றும் எஸ்டிஎல்சி தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
பணி என்பது மதுரையில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் இருக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரிக்கு ரெஸ்யூம் உள்பட பிற விவரங்களை அனுப்பி வைக்க கொண்டும். சப்ஜெக்ட் லைனில் Playwright Automation Test Lead Madurai என எழுதி அனுப்பி வைக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications