சென்னையிலேயே ஐடி வேலை.. அழைக்கும் எச்சிஎல்.. நாளை காலை 9 மணிக்கு இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (நவம்பர் 8) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னை நாவலூரில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்று பயன்பெறலாம்.
எச்சிஎல் அலுவலகத்தில் தற்போது Embedded Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளநிலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அல்லது தொடர்புடைய பிரிவில் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அதேபோல் சி++ புரோகிராமிங் லேங்குவேஜில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். Embedded சிஸ்டம்ஸ் மற்றும் மைக்ரோகண்ட்ரோலர்ஸில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். லினக்ஸ் டெவலப்மென்டில் கண்டிப்பாக அனுபவம் இருக்க வேண்டும். அதேபோல் மைக்ரோகண்ட்ரோலர் புரோகிராமிங் (ARM, AVR, PIC) உள்ளிட்டவை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
RTOS எனும் ரியல் டைம்ஆபரேட்டிங் சிஸ்டமில்ஸ் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Strong Debugging மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக 3 முதல் 5 ஆண்டுகள் வரை Embedded Software Development-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஹார்ட்வேர்- சாப்ட்வேர் இன்டிகிரேஷனில் அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதற்கான இண்டர்வியூ நாளை (நவம்பர் 8) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ETA 1, Sandhya Infocity, Navalur, என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். சந்தேகம் இருப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள செல்போன் எண்ணை பயன்படுத்தி தீர்த்து கொள்ளலாம். இல்லாவிட்டால் [email protected] என்பதை தொடர்பு கொள்ளலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications