மதுரையில் ஐடி வேலை.. HCL தரும் சூப்பர் சான்ஸ்.. செம வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்குள்ள காலியிடங்கள் என்ன? யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? என்பது பற்றிய முழு விபரம் வருமாறு:

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இன்னும் சில நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

it jobs jobs job

எச்சிஎல் சார்பில் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அடிக்கடி அறிவிப்புகள் என்பது வெளியாகும். ஆனால் இந்த முறை மதுரை ஐடி நிறுவனத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி மதுரை ஐடி நிறுவனத்தில் ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Java Full Stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா, ஸ்பிரிங்புட்டில் நல்ல அனுபவம் இருக்க வேண்டும். அதேபோல் பிரண்ட்எண்ட் ஸ்கில்ஸ் பிரிவில் Angular/React, HTML, CSS, JavaScript உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் REST APIs, Microservices தெரிந்திருக்க வேண்டும். டேட்டாபேஸ் பிரிவில் MySQL/PostgreSQL/MongoDB தெரிந்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். சம்பளம் குறித்த பிற விபரங்கள் கடைசிகட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள முகவரிக்கு விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

விபரங்களை அனுப்பி வைக்க கடைசி தேதி எது என்று தெரிவிக்கப்படவில்லை. இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் தேவையான அளவுக்கு ஆட்கள் விண்ணப்பம் செய்தால் அதன்பிறகு அறிவிப்பு காலாவதியாகிவிடலாம். அதன்பிறகு விண்ணப்பம் செய்தவற்களுக்கு இண்டர்வியூ உள்பட பிற விபரங்களை எச்சிஎல் நிறுவனம் அனுப்பி வைக்கும். அதன்பிறகு இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்வதை அறிய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+