சென்னையில் ஐடி வேலை.. நாவலூரில் இன்று நடக்கும் இண்டர்வியூ.. எச்சிஎல் தரும் சூப்பர் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் சார்பில் இன்று காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ சென்னை நாவலூரில் இன்று நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்று பயன்பெறலாம்.

நம் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் டெக்னாலஜிஸ் செயல்பட்டு வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் நம் நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலும் இயங்கி வருகிறது.

it jobs jobs job

தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது இன்சூரன்ஸ் - குவாலிட்டி அனலிஸ்ட் (Insurance - Quality Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு லைப் இன்சூரன்ஸ் பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். சந்தேகத்துக்கு இடமான பரிவர்த்தனை மற்றும் fraud case உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் திறமை இருகக வேண்டும்.

AML, KYC உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டம். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருப்பதோடு, குவாலிட்டி மேனேஜ்மென்ட் திறமையும் இருக்க வேண்டும். இதுதவிர ஆடிட், லைஃப் இன்சூரன்ஸ்க்கான குவாலிட்டி செக்கிங், அப்ளிகேஷன்கள் மற்றும் கிளைம்ஸ் உள்ளிட்டவை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படிவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ இன்று காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech Navallur ETA 1, Sandhya Infocity next to VIVIRA MALL என்ற முகவரிக்கு காலை 10 மணிக்கு முன்பாக செல்ல வேண்டும்.

இண்டர்வியூவுக்கு செல்வோர் தங்களின் கைகளில் 2 ரெஸ்யூம், ஏதேனும் ஒரு அரசு அடையாள அட்டை மற்றும் பணி தொடர்பான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூடுதல் விவரங்களை அறிய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+