மதுரையில் ஐடி வேலை.. HCL நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. ரெடியா?
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பணியை பெற நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் டெக் (HCL Tech) எனும் நிறுவனம் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. சுருக்கமாக எச்சிஎல் என அழைக்கப்படும் இந்த நிறுவனத்துக்கு தமிழகத்தில் பல இடங்களில் அலுவலகங்கள் உள்ளன.

அதன்படி சென்னை சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் அலுவலகங்களில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது சீனியர் டெக்னிக்கல் லீட் (Senior Technical Lead) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு GxP அப்ளிகேஷன் ஏரியாவில் பிசினஸ் அனலிசிஸ் அல்லது குவாலிட்டி மேனேஜ்மென்ட் அல்லது கம்ப்யூட்டர் சிஸ்டம் வேலிடேஷன் பிரிவில் 6 முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் கிளினிக்கல் டெவலப்மென்ட் மற்றும் சப்ளை செயின் (Clinical Development and Supply Chain), டிரக் டிஸ்கவரி (Drug Discovery), MES, QMS, LIMS, டேட்டா இன்டிகிரிட்டி பிளாட்பார்ம் கைட் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
டெக்னாலஜி லீடர், புராஜெக்ட் மேனேஜர், பிசினஸ் ஓணர் உள்ளிட்டவர்களிடம் பேசும் வகையில் கம்யூனிகேஷன் திறமை நன்கு பெற்றிருக்க வேண்டும். இதுதவிர மேலும் சில குறிப்பிட்ட தகுதிகளை விண்ணப்பத்தாரர்கள் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. பணிக்கான கடைசி கட்ட இண்டர்வியூவின்போது சம்பளம் குறித்த விபரம் வெளியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.hcltech.com இணையதளத்தில் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்ன என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். இதனால் இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications