அனுபவம் வேண்டாம்.. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் டூ ரூ.20 லட்சம் வரை சம்பளம்.. அழைக்கும் எச்சிஎல் நிறுவனம்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 2024ம் ஆண்டு இன்ஜினியரிங் முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுகு்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
நம் நாட்டை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் (HCL or HCL Technologies) எனும் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் என்பது உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ளது.

இந்தியாவில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி துறையில் 3வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தான் எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் என்பது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள முக்கிய அறிவிப்பின் முழு விபரம் வருமாறு:
எச்சிஎல் சார்பில் தற்போது டேட்டா /ஏஐ (Data/AI) டீமுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஐஐடி/என்ஐடி உள்ளிட்ட டாப் 25 கல்லூரிகளில் பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை 2024ம் ஆண்டு சிஜிபிஏ 6 அல்லது அதற்கு மேல் வைத்து முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் இந்த துறையில் பணி அனுபவம் இல்லாமல் படிப்பை முடித்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கூட விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் (Data Structures), அல்காரிதம்ஸ் (Algorithms), டிபிஎம்எஸ் (DBMS) உள்ளிட்டவை நன்கு தெரிந்திருக்க வேண்டும். மேலும் க்ளைவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing), நியூரல் நெட்வொர்க்ஸ் (Nural Networks) மற்றும் என்எல்பி (NLP) உள்ளிட்டபற்றை பற்றியும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
மேலும் AWS Cloud Practitioner, Solutions, architect, Data engieer, DeVops engineer, ML Engineer உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் சர்ட்டிபிகேட் வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி Cloud அல்லது AI/ML-ல் இன்டன்ஷிப் செய்திருந்தால் அது விண்ணப்பம் செய்வோருக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ20 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு என்பது நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.ஏனென்றால் தேவையான விண்ணப்பத்தாரர்கள் கிடைத்தால் உடனடியாக விண்ணப்பத்துக்கான லிங்க் என்பது காலாவதியாகிவிடும்.
பணி பற்றிய அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications