‛‛அனுபவம் தேவையில்லை’’.. எச்சிஎல் நிறுவனத்தில் அடுத்த வேலைவாய்ப்பு.. சென்னையில் தான் பணி.. ரெடியா?
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் நிறுவனத்தில் போஸ்ட் கிராசூவேட் இன்ஜினியர் டிரெய்னி பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு அனுபவம் எதுவும் தேவையில்லை. 2024ம் ஆண்டு படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர் உள்பட 5 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனமாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் எச்சிஎல் சார்பில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் போஸ்ட் கிராசூவேட் இன்ஜினியர் டிரெய்னி (Post Graduate Engineer Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்னர். இந்த பணிக்கு எம்இ, எம்டெக் படிப்பை கன்ட்ரோல் சிஸ்டம், இசிஇ, ட்ரிபிள் இ (EEE), பவர் சிஸ்டம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட பிரிவுகளில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பத்தார்கள் இந்த படிப்பை 2024ம் ஆண்டில் முடித்திருக்க வேண்டும். இதன்மூலம் பணி அனுபவம் தேவையில்லை என்பது உறுதியாகி உள்ளது.
ஆனாலும் கூட விண்ணப்பத்தாரர்கள் தங்களின் கல்லூரி, பல்கலைக்கழக படிப்பை 65 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். அதோபோல் ஒரு கண்டிஷன் உள்ளது. அதாவது பணிக்கு தேர்வாகும் நபர்கள் 12 மாத (அதாவது ஓராண்டு) அக்ரிமெண்ட்டில் பணியாற்ற வேண்டும். ஒருவேளை பணிக்கு தேர்வாகி முதல் 12 மாதத்துக்குள் வேலையை விட்டால் அவர்கள் எச்சிஎல் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழகத்தில் சென்னையில் நியமனம் செய்யப்படுவார்கள். இதுவிர பெங்களூர், நொய்டா, புனே, குர்கிராம் உள்ளிட்ட இடங்களிலும் பணியமர்த்தப்படுவர்கள்.இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பள விபரம் பின்னர் அறிவிக்கப்படும். திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப பதிவு முடிவுக்கு வரலாம். இதனால் இந்த பணியை விரும்புவோர் முடிந்த வரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications