நாளை முதல் 3 நாள் இண்டர்வியூ.. எச்சிஎல் அலுவலகத்தில் குவிந்திருக்கும் வேலை.. செம சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை (டிசம்பர் 8) முதல் டிசம்பர் 10ம் தேதி வரை 3 நாட்கள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த இண்டர்வியூவில் பிகாம், எம்காம், பிபிஏ, எம்பிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்கள் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. தற்போது எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் International Banking (Semi- Voice) பிரிவில் Process Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இது Freshers-களுக்கான பணியாகும். இதனால் அனுபவம் எதுவும் வேண்டாம். இருப்பினும் விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி பணியை விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடிக்க வேண்டும். பிகாம், எம்காம், பிபிஏ, எம்பிஏ, பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ் தவிர) பிரிவுகளில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பிடெக், பிஇ, எம்சிஏ, எம்எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
மேலும் ஒவ்வொருவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் பைனான்ஸ்/பேங்கிங் பற்றிய அறிவு இருக்க வேண்டும். ரோட்டேஷனல் ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இதனால் நைட்ஷிப்டும் இருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 8 (நாளை) முதல் டிசம்பர் 10ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, TETA 3, Sandhya Infocity, OMR, Rajiv Gandhi Salai, Near AGS Cinemas, Navalur, Chennai - 600 130 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூவுக்கு செல்வோர் ரெஸ்யூம், அரசு அடையாள அட்டை, கல்வி சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications