ஆகஸ்ட் 12ம் தேதி இண்டர்வியூ.. சென்னை எச்சிஎல் நிறுவனம் தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. நாவலூரில் பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னையில் ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் நாவலூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் வருமாறு:

hcl-tech-hiring-for-otc-collection-role-in-chennai-and-interview-to-be-held-on-august-12

எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது ஓடிசி கலெக்சன் (OTC Collections) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோர் குறிப்பிட்ட பிரிவில் ஏதாவது ஒரு டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் ஓடிசி கலெக்சன் பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இதுதவிர கலெக்சன் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும். Cash Collection, Account Mangement, Customer Relatiosn, controls compliancy உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நைட்ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் பணியழாகும். 2 நாட்கள் விடுமுறையாகும். தற்போதைய அறிவிப்பின் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 12ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies, AMB 6, South Phase, Ambatture Industrial Estate, 8 Madras Thriuvallur High Road, Ambattur, Chennai, Tamil nadu 600058 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

இண்டர்வியூ செல்வோர் 2 Resume, 2 ஐடி ப்ரூப் எடுத்து செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து ஆகஸ்ட் 12ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்றகலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+