HCL வேலைவாய்ப்பு.. தாம்பரத்தில் பிப்ரவரி 10ம் தேதி இண்டர்வியூ.. சென்னையில் பணி நியமனம்
சென்னை: சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 10ம் தேதி தாம்பரத்தில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் டீம் லீட் (Team Lead) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு இளநிலை, முதுநிலை பிரிவில் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். நல்ல அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். மைக்ரோசாப்ட் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும்.
அதோடு Card disputes Domain-ல் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் எஸ்எல்ஏ மேனேஜ்மென்ட், எம்ஐ ரிப்போர்ட்டிங் தெரிந்திருக்க வேண்டும். கோ ஆடினேட் மற்றும் மோட்டிவேட் செய்ய தெரிந்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். அதோடு பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 10ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் Tower 4, Elcot SEZ Special Economic Zone, 602/3, 138, Sholinganalur Village, Shollinganallur - Medavakkam High Road, Tambaram, Kanchipuram என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications