ஆங்கிலம் பேச தெரிந்தால் போதும்.. சென்னை HCL -லில் குவிந்திருக்கும் வேலை.. செப்.18,19ல் இண்டர்வியூ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சோழிங்கநல்லூர் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் 19 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து தற்போது AR Callers பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை பெற விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்ம். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். கஸ்டமர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தெரிந்திருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி மற்றும் டைப்பிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

it jobs job chennai

மல்டி டாஸ்கிங் திறமை இருக்க வேண்டும். டீமாக சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். அதோடு 12 முதல் 24 மாதங்கள் வரை இன்டர்நேஷனல் வாய்ஸ் (இன்பவுண்ட்/அவுட்பவுண்ட்) புராசஸ் பணியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இண்டர்வியூ நடைபெறும்.

இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, SEZ Tower 4, 138, 602/3, Medavakkam High Road, Elcot Sez, Sholinganallur, Chennai, Tamil Nadu 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணி US Shift முறையில் இருக்கும். தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரின் எல்காட்டில் இருக்கும் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+