HCL ஐடி வேலைவாய்ப்பு.. ஆகஸ்ட் 2ம் தேதி சென்னையில் இண்டர்வியூ.. யாருக்கெல்லாம் சான்ஸ்?
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 2ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள பணி குறித்த அறிவிப்பின் விவரம் வருமாறு:

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் ஆட்டோமேஷன் மற்றும் மேனுவல் டெஸ்டர் (Automation & Manual Tester) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியை விரும்புவோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தொடர்புடைய ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 முதல் 7 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங் டூல்ஸில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
எஸ்டிஎல்சி எனும் சாப்ட்வேர் டெவலப்மென்ட் லைப் சைக்கிள் பற்றிய நல்ல புரிதல் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் மேனுவல் டெஸ்ட்டிங் மெத்தடாலாஜிஸில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். புரோகிராமிங் லேங்குவேஜ்களில் ஜாவா அல்லது பைத்தான் உள்ளிட்டற்றில் ஏதேனும் ஒன்று தெரிந்திருக்க வேண்டும்.
Agile Methodologies மற்றும் பெர்பாமன்ஸ் டெஸ்ட்டிங் டூல்ஸில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
இந்த பணிக்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 2ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ETA 1, Sandhya Infocity, Navalur என்ற முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: HCL-யில் காலியிடங்கள்.. ஜூன் 20ம் தேதி சென்னை, பெங்களூர் உள்பட 3 இடங்களில் இண்டர்வியூ -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications