அனுபவம் தேவையில்லை.. எச்சிஎல் நிறுவனத்தில் அக்டோபர் 25ம் தேதி இண்டர்வியூ.. சென்னையில் பணி
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் முதல் 4 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 25ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை உள்பட முக்கிய நிறுவனங்களில் அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில் தான் சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது இன்டர்நேஷனல் வாய்ஸ் (International Voice) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும். நன்கு கவனிக்கும் திறமை இருக்க வேண்டும். டீமாக சேர்ந்து செயல்பட வேண்டும். கஸ்டமர் கேர் திறமை இருக்க வேண்டும். கஸ்டமர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
லீடர்ஷிப் மற்றும் பணியாளர்களை மேனேஜ் செய்யும் திறமை இருக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்களும் அலுவலகம் வந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். முன்அனுபவம் இல்லாதவர்களும், சம்பந்தப்பட்ட பிரிவில் 4 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம். ஏதாவது இன்டர்நேஷனல் வாய்ஸ் பிரிவில் பணியாற்றியவர்கள் என்றால் முன்னுரிமை அளிக்கப்படும்.
பணி என்பது US Shift முறையில் இருக்கும். இதனால் நைட்ஷிப்ட்டிற்கு தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 25ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது HCL Tech, No.8, MTH Road, AMb 6, Ambattur Industrial Estate, Ambattur, Chennai - 600 058 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
இண்டர்வியூவில் பங்கேற்க செல்வோர் 2 ரெஸ்யூம் ஆதார், பான், லைசென்ஸ் என்று ஏதாவது ஒரு அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications