மத்திய பாதுகாப்பு படையில் ஹெட் கான்ஸ்டபிள் வேலை.. 233 காலியிடங்கள்! 81 ஆயிரம் சம்பளம்! விட்றாதீங்க
சென்னை: மத்திய பாதுகாப்பு படையில் ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 233 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 12 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.81 ஆயிரம் வரை வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கு காணலாம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு படை பிரிவான சாஸ்த்ரா சீமா பால் (எஸ்.எஸ்.பி) நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுடனான எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சட்ட விரோத ஊடுருவல்கள், எல்லையோரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளும் எஸ்.எஸ்.பி படை பிரிவில் தலைமைக் காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணபிக்கலாம்.. கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
* தலைமைக் காவலர் (Steward) - 02
* தலைமைக் காவலர் (Communication)) - 197
* தலைமைக் காவலர் (மின்பணியாளர்) - 29
* தலைமைக் காவலர் (கால்நடை மருத்துவம்) - 05
என மொத்தம் 233 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
தலைமைக்காவலர் பணிக்கு குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்து இருக்க வேண்டும். ஸ்டிவார்டு பணிக்கு குறைந்த பட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம். 100 படுக்கைகளுக்கு குறைவு இல்லாத மருத்துவமனையில் ஓராண்டாவது பணி செய்து இருக்க வேண்டும்.
கம்யூனிகேஷன் பிரிவு பணிக்கு எலக்ட்ரானிக்ஸ் அல்லது கம்யூனிகேஷன்ஸ் அல்லது கணினி அறிவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். கல்வித்தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் படித்து உறுதி செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு
18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் , பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் சலுகைகள் அளிக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
மத்திய அரசின் 7-வது ஊதிய கமிஷன் லெவல் 4 படி சம்பளம் வழங்கப்படும். அதாவது, மாதம் ரூ.25,500- ரூ.81,100 வரை கிடைக்கும். தேர்வு முறையை பொறுத்தவரை உடல் தகுதி தேர்வு, உடல் அளவீட்டு தேர்வு, கணினி வழி தகுதி தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. பிற விண்னப்பதாரர்களுக்கு மாதம் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 20.04.2026 ஆகும். விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்வது அவசியம்.
தேர்வு அறிவிப்பை படிக்க: https://ssb.gov.in/
-
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 60 ஆயிரம் வரை சம்பளம்.. டிப்ளமோ, டிகிரி முடிச்சவங்க விட்றாதீங்க! -
IT Jobs: டிகிரி முடிக்காதவர்களுக்கும் வேலை.. அழைக்கும் HCL..ஏப்ரல் 14ல் சென்னையில் இண்டர்வியூ -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம்












Click it and Unblock the Notifications