திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்.. 5ம் வகுப்பு தகுதி.. எப்படி விண்ணப்பிப்பது?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் காலியாக உள்ள 5 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் கொல்லப்பட்டி, குட்டம், வேல்வார்கோட்டை, தென்னம்பட்டி, இராமநாதபுரம் ஆகிய 5 வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடம் உள்ள கிராமம் மற்றும் இட ஒதுக்கீடு விபரங்கள் வருமாறு:

கொல்லப்பட்டி கிராமத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த (பி.சி.யில்,முஸ்லீம் அல்லாதவர்) (பெண்கள்) விண்ணப்பிக்கலாம். குட்டம் கிராமத்திற்கு பொதுப்பிரிவினைச் சேர்ந்த முன்னாள் இராணுவத்தினர்(சி மற்றும் டி பிரிவு) (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வேல்வார்கோட்டை கிராமத்திற்கு எஸ்.ஸி பிரிவில் (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இப்பிரிவில் அருந்ததியினருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தென்னம்பட்டி கிராமத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் (ஆண் /பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இராமநாதபுரம் கிராமத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த (பி.சி.யில்-முஸ்லீம் அல்லாதவர்) (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 01.07.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 30 ஆண்டுகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினருக்கு 32 ஆண்டுகள், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 35 ஆண்டுகள். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவுகள் நாளது தேதி வரை புதுப்பிக்கபட்டிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் வேடசந்தூர் வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி குறித்த ஆவணங்களில் சான்றொப்பமிட்ட நகல்களுடன் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 15.12.2020-ம் தேதி 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வேடசந்தூர் வட்டாட்சியர் பா.ஆ.லதா தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications