ரூ.10000 உறுதியாக கிடைக்கும்.. ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் என்றால் என்ன? எப்படி இதில் இணைவது?
மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யூபிஎஸ்) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், ஊழியர்கள் உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கும் (என்.பி.எஸ்) இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும் இடையே தேர்வு செய்யும் வாய்ப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தால் ஓய்வூதிய முறையில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய பாஜக அரசு பல முக்கிய நலத்திட்ட அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்புகள் சில விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வரிசையிலேயே இந்த புதிய ஓய்வூதிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்
தற்போதைய புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% ஓய்வூதியத்திற்காக செலுத்த வேண்டும். அரசு 14% பங்களிக்கும். இந்த முதலீட்டுத் தொகையின் சந்தை வருவாயைப் பொறுத்தே இறுதி ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும். முந்தைய பழைய ஓய்வூதிய முறை, பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% நிலையான ஓய்வூதியமாக உறுதி அளித்தது. ஆனால், புதிய முறைப்படி, கடைசி ஊதியத்தில் சுமார் 38% மட்டுமே ஓய்வூதியமாக கிடைக்கிறது.
இந்த சூழலில்தான் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யூபிஎஸ் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாகப் பெறுவார்கள். இந்த முழு ஓய்வூதியத்தைப் பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும்.
இந்த நிதியாண்டு முதல், தேசிய ஓய்வூதியத் திட்ட சந்தாதாரர்கள், உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யூபிஎஸ்) மாறுவதற்கான விருப்பம் வழங்கப்படும். புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் யூபிஎஸ் இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். யூபிஎஸ் ஓய்வூதியத் திட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட அதிக ஓய்வூதியம் கிடைக்கும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் : என்ன பலன்கள்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி, குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி முடித்த ஓய்வு பெற்றவர்கள், கடைசி 12 மாத சேவையின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள். 10 முதல் 25 ஆண்டுகள் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் பணிக்காலத்துக்கு ஏற்றவாறு ஓய்வூதியம் வழங்கப்படும். இத்திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். மார்ச் 31, 2025-க்குள் ஓய்வு பெறுபவர்களுக்கும் இந்தத் திட்டத்தின் பலன்கள் பொருந்தும்.
பென்ஷன் திட்டம் : எப்படி இணைவது?
இந்தத் திட்டத்தில் இணைவது மிகவும் எளிது. மத்திய அரசு அலுவலகத்தில் உள்ள உங்கள் மனிதவளப் பிரிவு அல்லது உயர் அதிகாரிகளிடம் இந்த இரண்டு ஓய்வூதிய முறைகளில் எதைத் தேர்வு செய்கிறீர்கள் என்பதைத் தெரிவித்து இணையலாம். ஏப்ரல் 1, 2004-க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களுக்கு, குறிப்பாக குறைந்த ஊதிய விகிதத்தில் உள்ளவர்களுக்கு, அடிப்படை நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இத்திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் ₹10,000 மாத ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications