தமிழக வீட்டு வசதி வாரிய தலைவரானார் சிவா! பெரம்பூர் தொகுதியை விட்டு தந்த மா.செ.க்கு விஜய் கவுரவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தவெக வடசென்னை மாவட்டச் செயலாளராக உள்ளார். பெரம்பூர் தொகுதியை தனக்காக விட்டுக் கொடுத்தவர் சிவா என வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் விஜய் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக ஆட்சியை பிடித்துள்ள நிலையில் வாரிய தலைவர் பதவிகளை நியமித்து வருகிறது. அந்த வகையில் தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

CM Vijay

அது போல் தனது ஓட்டுநர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதன், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட விஜய் வாய்ப்பு கொடுத்து அவர் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் அவர் அமைச்சராக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தவெக கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். தவெக எம்எல்ஏக்கள், ஏன் விஜய்யே கொறடாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர்தான்.

இதைத் தொடர்ந்து தமிழக பாடநூல் கழகத் தலைவராக லயோலா மணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டிருந்தார்.

அது போல் தற்போது தமிழக வீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா என்பவரை நியமித்து விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த சிவா வடசென்னை தவெக மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.

சட்டசபை தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் அறிமுக விழாவின் போது பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிருந்தார். அப்போது பெரம்பூர் தொகுதியை தனக்காக விட்டுக் கொடுத்தவர் சிவா என அவரை மேடையேற்றி நெகிழ்ச்சி அடைந்தார்.

மேலும் சிவாவை மேடைக்கு அழைத்ததும் அவரது ஆதரவாளர்கள் கை தட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். அப்போது "கவலைப்படாதீங்கள் உங்கள் சிவாவை நான் நல்லா பார்த்துக்குவேன்" என்றும் விஜய் அவரது ஆதரவாளர்களிடம் உறுதியளித்திருந்தார்.

அது போல் பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வெற்றிக்கும் சிவா உள்ளிட்டோர் பாடுபட்டனர். இந்த தேர்தலில் விஜய் 1,20,365 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்டி சேகர் 66,650 வாக்குகளையும் பாமக வேட்பாளர் திலகபாமா 8,561 வாக்குகளை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாவை போல் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனுக்கும் வாரியத் தலைவர் பதவியை விஜய் கொடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+