Accenture வேலைவாய்ப்பு.. ஹைபிரிட் முறையில் பணி.. கோவையிலேயே நியமனம்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான Accenture-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதோடு அவர்களுக்கு ஹைபிரிட் (Hybrid) முறையில் பணி என்பது வழங்கப்பட உள்ளது.

நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஆக்சென்ச்சர் (Accenture). கர்நாடகாவில் பெங்களூர், தெலுங்கானாவில் ஹைதராபாத், மகாராஷ்டிராவில் மும்பை, புனே, மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, ஒடிசாவில் புவனேஸ்வர், ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், மத்திய பிரதேசத்தில் இந்தூர், குர்கிராம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

it jobs job jobs

அதேபோல், தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் ஆக்சென்ச்சர் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் கோவையில் செயல்பட்டு வரும் ஆக்சென்ச்சரில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் அப்ளிகேஷன் டெவலப்பர் (Application Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்மென்ட் (Java Full Stack Development) பணியில் குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி ஃப்ரண்ட் என்ட் ஃப்ரேம்வொர்க்ஸ்களான Angular அல்லது React தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி RESTful API டெவலப்மென்ட் மற்றும் இன்டிகிரேஷன், டேட்டாபேஸ் டெக்னாலஜிஸ்களான MySQL அல்லது Oracle தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Git அல்லது SVN தெரிந்திருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இது பெங்களூர் ஆக்சென்ச்சர் நிறுவனத்தை அடிப்படையாக கொண்ட பணியாகும். இதனால் கோவை நியமனம் செய்யப்பட்டாலும் கூட பெங்களூரில் ரிப்போர்ட் செய்ய வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி இது ஒரு ஹைபிரிட் (Hybrid) வகை பணியாகும். இதனால் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் அலுவலகம் சென்றால் போதும். 2 நாட்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்ற வாய்ப்ப வழங்கப்படலாம்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். எனவே இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணி பற்றிய அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+