பொதுத்துறை வங்கிகளில் வேலை.. 4 ஆயிரம் பணியிடங்கள்.. டிகிரி போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் சுமார் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
எஸ்.பி.ஐ தவிர்த்து நாட்டில் உள்ள பிற பொதுத்துறை வங்கிகளான இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு அமைப்பு மூலம் நிரப்பப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்: எழுத்துத் தேர்வு மூலம் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு இந்த பணியிடங்கள் நிரப்பபடுகிறது. தற்போது வங்கிகளில் காலியாக உள்ள 4045 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கணிணியில் பணிபுரியும் அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்புகளில் தளர்வு உண்டு. இத் குறித்த விவரங்களை தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு எப்படி நடைபெறும்?: ஆன்லைன் வழியே மட்டுமே தேர்வு நடைபெறும். முதன் நிலை தேர்வு, மெயின் எக்ஸாம் ஆகியவை நடைபெறும். தேர்வு மையங்களை பொறுத்தவரை சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, மதுரை நாகர்கோவில்,நெல்லை, வேலூர், விருதுநகர், சேலம் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: கடந்த 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் தொடங்கியது. வரும் 21 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிப்பதில் கேட்கப்படும் விவரங்கள், பதிவேற்றம் செய்யப்படும் ஆவணங்கள் குறித்த விவரங்களை https://www.ibps.in/crp-rrb-xii என்ற வெப்சைட்டில் பார்த்துக் கொள்ளலாம்.
தேர்வு எப்போது?: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் அட்மிட் கார்டு வெளியிடப்படும். முதன்மை தேர்வு ஆகஸ்ட் 26, 27 மற்றும் செப்டம்பர் 2 ஆம் தேதிகளில் நடைபெறும்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் பிற பிரிவினர் தேர்வு கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ பிடபிள்யூடி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் ரூ. 175 ஆகும்.
சம்பளம் எவ்வளவு?: அடிப்படை சம்பளமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக வழங்கப்படும். அடிப்படை சம்பளத்தை தவிர பிற அலவன்ஸ்களும் சேர்த்து ஊழியர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும்.
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications