ஐபிபிஎஸ்: வங்கிகளில் வேலை.. 6,128 கிளார்க் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள்!
சென்னை: ஐபிபிஎஸ் நடத்தும் வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 6,128 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையமானது, எஸ்.பி.ஐ வங்கியை தவிர்த்து நாட்டில் உள்ள இதர பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் வங்கி, யுகோ வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகராஷ்டிரா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் நிரப்பி வருகிறது.

கிளார்க் பணியிடங்கள்: ஆண்டு தோறும் ஐபிபிஎஸ் வெளியிடும் கிளார்க் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து போட்டி தேர்வர்கள் படித்து வருவதை காண முடியும். இந்த நிலையில் தான் போட்டி தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்த கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த 1 ஆம் தேதி வெளியாகியது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..
பணியிடங்கள் விவரம்: நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,128 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 665 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பேங்க் ஆப் இந்தியா (16 பணியிடங்கள்), கனரா வங்கி ( 40), சென்ட்ரல் வங்கி (90), இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் (75), பஞ்சாப் நேஷனல் வங்கி ( 35), பஞ்சாப் சிந்த் வங்கி ( 09) என மொத்தம் தமிழகத்தில் 665 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதியை பொறுத்தவரை ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயது உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதாவது, 02.07.1996 க்கு முன்பாக பிறந்தவர்களும் 01.07.2004 பிறகு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க முடியாது. எனினும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளவுர்வுகள் உண்டு. எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், புதுவை ஆகிய நகரங்களில் முதன்மை தேர்வு நடைபெறும். மெயின் தேர்வை பொறுத்தவரை சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருது நகர், புதுச்சேரி ஆகிய நகரங்களில் நடைபெறும்.
தேர்வு தேதி: முதன்மை தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும். செப்டம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மெயின் தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து அறிந்து கொள்ளவும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் ரூ.175 ஆகும். விண்ணப்பிக்க நாளை தான் ( 21.07.2024) கடைசி நாள் ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க https://www.ibps.in/wp-content/uploads/CRP_Clerks_XIV_Final_Notification_28.6.24.pdf என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.. விண்ணப்பிக்க https://www.ibps.in/index.php/clerical-cadre-xiv/ என்ற இணையதள லிங்கிற்கு சென்று தேவையான விவரங்களை கொடுத்து விண்ண்ப்பிக்கலாம்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications