வந்தது செம அறிவிப்பு.. வங்கியில் 3049 பணியிடங்கள்.. டிகிரி முடிச்சீருக்கீங்களா.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் Probationary Officers (PO) பதவிகளுக்கான 3,049 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியாகி உள்ளது. தகுதி உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 28ம் தேதிக்குள், https://ibps.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி பணியாளர்கள் அமைப்பு (IBPS) அண்மையில் சிறப்பு அதிகாரிகள் மற்றும் ப்ரோபேஷனரி அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான முறையே IBPS SO 2023-24 மற்றும் IBPS PO 2023க்கான அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.

அதிகாரப்பூர்வ இணையதளமான ibps.in ல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்டஇரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை அவகாசம் அளித்திருக்கிறது.
IBPS SO 2023 க்கான (சிறப்பு அதிகாரி பணியிடம் 2023) , முதல்நிலைத் தேர்வு டிசம்பர் 30 அல்லது 31 இல் நடத்த ஐபிபிஎஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளது. அதன்பின்னர் முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், IBPS PO 2023 ( புராபசனரி அதிகாரி 2023) பணியிடங்களுக்கு முதற்கட்டத் தேர்வு செப்டம்பரில் நடைபெற உள்ளதாம். முதன்மைத் தேர்வு நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு விவரங்கள் , இட ஒதுக்கீடு கொள்கைகள் மற்றும் PO மற்றும் SO பதவிகளுக்கு (சிறப்பு அதிகாரிகள் மற்றும் ப்ரோபேஷனரி அதிகாரி) பணியிடங்களுக்கு விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறியலாம்.
வயது தகுதி 20 முதல் 30 வயது வரை உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : Rs. 52,000/- to Rs.55,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும்.
IBPS அமைப்பு பட்டியலிடப்பட்ட சாதி/பட்டியலிடப்பட்ட பழங்குடி இன விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வரை வயது சலுகை அளித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (கிரீமி லேயர் அல்லாத) விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு வரை வயது தளர்வு அளித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரையிலும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகள் வரையிலும் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் முடிந்து இறுதி முடிவுகள் டிசம்பர் 2023 இல் அறிவிக்கப்படும் என்றும் நேர்காணல் மற்றும் பணி ஒதுக்கீடு ஆகியவை 2024 ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரத்தை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை பாருங்கள்
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications