மத்திய அரசு வேலை.. சென்னையில் பணியிடம்.. டிகிரி முடித்திருந்தால் அப்ளை பண்ணலாம்.. செம சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 27 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். வரும் 30 ஆம் தேதி தான் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இந்த பணியிடங்களுக்கு வயது வரம்பு என்ன? எப்படி விண்ணப்பிப்பது? என்று இங்கே பார்க்கலாம்.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னை, கொச்சி, கொல்கத்தா, மும்பை துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் உள்ளது. மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் கீழ் இந்த பல்கலைக்கழகம் வருகிறது. மத்திய அரசின் இந்த பல்கலைக்கழகத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்படும்.

job jobs employment

அரசின் விதிகளின் படி உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில் தான் சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 27 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவற்றை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
உதவியாளர் -15 பணியிடங்கள்,
உதவியாளர் (ஃபைனான்ஸ்) - 12 பணியிடங்கள் என மொத்தம் 27 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை உதவியாளர் பணியிடத்திற்கு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப பிரிவில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஃபைனான்ஸ் உதவியாளர் பணியிடத்திற்கு வணிகவியல் அல்லது கணிதம் அல்லது புள்ளியியல் பாடப்பிரிவுகளில் டிகிரி அவசியம். 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது அவசியம்.

வயது வரம்பு & சம்பளம்: இரண்டு பணிகளுக்குமே விண்ணப்பிக்க விரும்புபவர்களின் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை உண்டும். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் சலுகை உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை ரூ.25,500 - 81,100 - வரை கிடைக்கும்.

தேர்வு முறை: கணிணி வழி தேர்வு நடைபெறும். அதிக மதிப்பெண்கள் பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். சென்னை, புதுடெல்லி, லக்னோ, பாட்னா, கொல்கத்தா, கவுகாத்தி, ஐதராபாத், கொச்சின், பெங்களூர், மும்பை, போபால், ஜெய்பூர் ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.. www.imu.edu.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் ஆர்வம் உள்ள விண்ணப்பதார்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பியுங்கள்.. தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை https://www.imu.edu.in/imunew/ கிளிக் செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+