ரெடியா? மாதஊதியம் ரூ.56,100 முதல் ரூ.2.50 லட்சம்! இந்திய ராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு
சென்னை: இந்திய ராணுவத்தில் எஸ்எஸ்சி (டெக்) பிரிவில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.56,100 முதல் அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்திய ராணுவத்தில் எஸ்எஸ்சி (டெக்) பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
இந்திய ராணுவத்தில் எஸ்எஸ்சி (டெக்) பிரிவில் மொத்தம் 196 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு ஆண்கள், பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி எஸ்எஸ்சி (டெக்) பிரிவில் 175 ஆண்கள், 19 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் எஸ்எஸ்சிடபிள்யூ (Non Tech) பிரிவில் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த 2 பணிக்கு பாதுகாப்பு படையில் உயிர் தியாகம் செய்தவரின் மனைவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த 196 காலியிடங்களை பொறுத்தமட்டில் சிவில் என்ஜினீயரிங் பிரிவில் 51, கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 48, எலக்ட்ரிக் என்ஜினீயரிங் 19, எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் 29, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 38, Misc என்ஜினீயரிங் 9, டெக்னீக்கல், Non டெக்னீக்கல் பிரிவில் தலா ஒரு பணியிடங்கள் நிரப்ப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட பிரிவில் டிகிரி, பிஇ, பிடெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோர் 20 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்எஸ்சி (டெக்), எஸ்எஸ்சிடபிள்யூ (டெக்) பிரிவு பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 20 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்எஸ்சிடபிள்யூ (Non Tech) பிரிவு பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு என்பது மே மாதம் 31ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.56,100 சம்பளம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை மாதம் 19ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பம் செய்வோர் எஸ்எஸ்பி நேர்க்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ எக்ஸாமினேசன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications