ரெடியா? தேர்வு இல்லை.. 10 முடித்தாலே போதும்.. தபால் துறையில் சூப்பர் வேலை.. அதுவும் தமிழகத்திலேயே!
சென்னை: தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 3,167 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி பிராஞ்ச் போஸ்டர் மாஸ்டர் என 2 பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படும் நிலையில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தேர்வு இல்லாமல் நேர்க்காணல் இன்றி பணிக்கு தேர்வு நடைபெற உள்ளதால் அனைவராலும் எளிதாக வேலையை பெற முடியும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தபால் துறை இயங்கி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மிகப்பெரிய நெட்வொர்க்காக இருக்கும் தபால் துறை மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல மாநிலங்களை போல் தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
இந்தியாவில் பிபிஎம் (Branceh Post Master)பிரிவு மற்றும் Assistant Branch Postmaster (ABPM/Dak Sevak) பிரிவில் மொத்தம் 40,889 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 3,167 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிவிஷன் வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய நீண்ட பட்டியல் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் லிங்க் செய்தியின் முடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம் எவ்வளவு?
அதன்படி பிபிஎம் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதிகபட்சம் என்றால் மாதம் ரூ.29,380 வரை சம்பளம் கிடைக்கும். ஏபிபிஎம் பணிக்கு செலக்ட் ஆகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.24,470 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

கல்வி தகுதி-வயது வரம்பு என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக விண்ணப்பத்தாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓபிசிக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டிக்கு 5 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது முதல் 15 வயது வரை வயது தளர்வு உண்டு.

எழுத்து தேர்வு இல்லை
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு எழுத்து தேர்வு, நேர்க்காணல் என எதுவும் கிடையாது. விண்ணப்பத்தாரர்களின் மதிப்பெண் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணி நியமனம் செய்யப்படுவார்கள். இதனால் விண்ணப்பம் செய்வோர் எளிதாக பணிக்கு தேர்வாக முடியும்.

விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் indiapostgdonline.gov.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். பிப்ரவரி 16ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய கடைசிநாளாகும். இந்த பணிகளுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.
பணி தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here
-
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications