12828 காலி பணியிடம்.. 10ம் வகுப்பு பாஸா நீங்கள்? தேர்வின்றி தபால் துறையில் சூப்பர் வேலை-நல்ல சம்பளம்
டெல்லி: இந்தியா முழுவதும் தபால் துறையில் பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் பிரிவுகளில் காலியாக உள்ள 12,828 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள்.
மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை இயங்கி வருகிறது. இந்திய தபால்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தபால்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

தற்போது வெளியாகி உள்ள புதிய அறிவிப்பின்படி இந்திய தபால் துறையில் மொத்தம் 12,828 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் பிபிஎம் (Branch Post Master/BBM)பிரிவு மற்றும் உதவி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் (Assistant Branch Postmaster/ABPM) பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டிலும் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில் பிபிஎம் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.12 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.29,380 வரையும் சம்பளம் கிடைக்கும். ஏபிபிஎம் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.24,470 வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயதை எட்டியிருக்க வேண்டும். அதிகபட்சம் என்றால் விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், மாற்று திறனாளிகளுக்கு 10 வயது முதல் 15 வயது வரை வயது தளர்வு உண்டு. வயது வரம்பு என்பது 2023 ஜூன் மாதம் 11ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் மதிப்பெண் வாரியாக ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணிக்கு நியமனம் செய்யப்படுவார்கள். இதன்மூலம் எழுத்து தேர்வு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் www.indiapostgdsonline.gov.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய அடுத்த மாதம் (ஜூன்) 11ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பங்களில் உள்ள தவறுகளை திருத்தி கொள்ள ஜூன் 14 வரை கால அவகாசம் வழங்கப்பட உள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது என வேலைவாய்ப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பணி தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய Click Here
மாநிலங்கள் வாரியாக காலிப்பணியிடங்கள் பற்றி அறிய Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications