இந்திய விமானப்படையில் வேலை பார்க்க ஆசையா? வந்தாச்சு அறிவிப்பு.. 153 பணியிடங்கள்!
சென்னை: நாட்டின் முப்படைகளில் ஒன்றாக விளங்கும் இந்திய விமானப்படையில், குரூப் சி பிரிவு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 153 பணியிடங்களை நிரப்ப விண்ணப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், கல்வித் தகுதி என்ன, வயது வரம்பு எவ்வளவு என்பது போன்ற விவரங்களை பார்க்கலாம்.
இந்திய விமானப்படையில் குரூப் சி பிரிவில் காலியாக உள்ள 153 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
1. எல்.டி.சி - 10
2. இந்தி தட்டச்சு செய்பவர் - 01
3. சமையல்காரர் (OG) - 12
4. கடைக்காரர் - 16
5. தச்சர் (SK) - 03
6. பெயிண்டர் (SK) - 03
7. மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) - 53
8. மெஸ் ஸ்டாஃப் - 07
9. சலவை செய்பவர் - 03
10. ஹவுஸ் கீப்பிங் ஸ்டாஃப் (HKS) - 31
11. வல்கனைசர் - 01
12. சிவில் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர் (சாதாரண தரம்) - 08
கல்வித் தகுதி:
* லோயர் டிவிஷன் கிளர்க் பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டைப்பிங் திறன் அவசியம்.
* இந்தி டைபிஸ்ட் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்தி டைப்பிங் திறன் பெற்று இருக்க வேண்டும். 9,000 கேடிஎம்பிஎச்/ 10500 கேடிஎம்பிச் வேகம் அவசியம்.
* ஸ்டோர் கீப்பர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஸ்டோர்ஸ் மற்றும் அக்கவுண்ட் மெயிண்டனிங்கில் முன் அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* குக் (ஆர்டினர் கிரேடு) பணிக்கு கேட்டரிங் பிரிவில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். ஒரு வருட அனுபவம் அவசியம்.
* பெயிண்டர் ( திறன்) - துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும்.
* கார்பெண்டர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து இருப்பது அவசியம்.
* மல்டி டாஸ்கிங் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அவசியம். ஓராண்டு பணி அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கபட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரையும் வயது வரம்பு தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு:
சம்பளத்தை பொறுத்தவரை பெரும்பாலான பணியிடங்களுக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் அளிக்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, பிராக்டிக்கல் டெஸ்ட் மற்றும் உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
விண்ணப்பிக்க வரும் 15.06.2025 கடைசி நாளாகும். தேர்வர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொள்ளவும். https://indianairforce.nic.in/- என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications